அரசு மருத்துவமனையில் நான்கு வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

அரசு மருத்துவமனையில் நான்கு வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சாதனை

சென்னை, மே 16- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். 'ஓர் ஏழைக் குழந்தைக்கு இப்படிப்பட்ட சிகிச்சையை கொடுத் ததில் குழந்தைகள் நல மருத்துவராக எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது'' என்கிறார், மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணிராஜன். 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நான்கு வயது ஆண் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கவலைப்பட்ட பெற்றோர், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், 'நியூராப்ளாஸ்டோமா' என்ற அரிய வகை புற்றுநோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கீமோ தெரபி உள்பட சில சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. இருப்பினும், 'எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்' என்ற சூழல் ஏற்பட்டது. 'இப்படி யொரு சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற் கொள்வதற்கு முப்பது லட்ச ரூபாய் வரையில் செலவாகும்' என்பதால் குழந்தையின் பெற்றோர் தவித்தனர்.

இதுதொடர்பாக, சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலேயே மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. 

இதையடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்ட பின்னர், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தையின் உடலில் இருந்த எலும்பு மஜ்ஜைக்கு சக்திவாய்ந்த கீமோதெரபி கொடுக்கப்பட்டு மீண்டும் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு புதிய செல்கள் வளர்வதற்கு மூன்று வாரங்கள் வரையில் தேவைப்படும் என்பதால், கிருமிகளால் பாதிக்கப்படாத வகையில் சூரிய வெளிச்சம் இல்லாத வசதி கொண்ட அறையில் குழந்தை சிகிச்சை பெற்று வருவதாக வும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணிராஜன், 

No comments:

Post a Comment