ஏட்டுத்திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

ஏட்டுத்திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

பல்கலைக்கழகங்கள் சித்தாந்தப் போர்களுக்கான மல்யுத்தக் களமாக மாறக் கூடாது, அதற்குப் பதிலாக அவை கருத்து பரிமாற்ற மேடையாக மாற வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது, ஜனநாயக நாடுகள் தங்கள் உயர்கல்வி நிறுவனங்களை எப்படிச் செய்ய விரும்புகின்றன என்பதற்கு எதிரானது என்கிறது தலையங்கச் செய்தி.

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக, விசாரணை குழு அறிக்கையை சமர்ப்பிக்க ஜூன் 20 வரை அவகாசம் உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

நாட்டின் சமூக சூழலை ஏற்றுக் கொள்ளாததால் தான் 1930களில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறும் "கசப்பான" முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்று வழக்குரைஞர் ஜெய் தேவ் கெய்க்வாட் எழுதிய அம்பேத்கர் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்ட விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பேசினார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment