அரிசி கடத்தலை தடுக்க எல்லைப் பகுதியில் தடுப்புக் குழுக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

அரிசி கடத்தலை தடுக்க எல்லைப் பகுதியில் தடுப்புக் குழுக்கள்

சென்னை, மே 28    தமிழ்நாடு எல்லையோரப் பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் 

கூறியிருப்பதாவது: கடந்த மே 23ஆம்  தேதி ஆந்திர மேனாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டில் இருந்து பொது விநியோகத் திட்ட அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்படுவ தாகவும், அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் வெளிச்சந்தையில் விற்பனைக்கு செல்கிறது. 

இதுதவிர, கருநாடக மாநிலத்தில் விற்பனைக்கும் அனுப்பப்படுவதாகவும், அவை கடத்தப்படும் தடங் களையும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்ட வாகன உரிமையாளர் மே.24ஆம்  தேதியே கைது செய்யப்பட்டுவிட்டார். அவரிடம் இருந்து 1,200 கிலோ அரிசியும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளில் எல்லையோர மாவட்டங்களில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால், 

2019-2020இல் 514 வழக்குகள் பதியப்பட்டு, 366 பேரும், 2020-2021இல் 544 வழக்குகள் பதியப்பட்டு 538 பேரும், 2021-2022 இல் ஏப்ரல் வரை 937 வழக்குகள் பதியப்பட்டு 836 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தெரியும்.

கடந்த ஆட்சியின் 2 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகளை, இந்த ஆட்சி ஓராண்டில் எடுத்துள்ளது. ஆந்திர முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள சென்னை, வேலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்கள் மட்டுமின்றி திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியிலும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துணை கண்காணிப் பாளர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக் கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

சந்தேகப் படும் வழித்தடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வீடியோ கேமரா மூலம் வாகன நகர்வு கண்காணிக்கப் படுகிறது. 

இவ்வாறு அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment