இலங்கைத் தீவில் உணவுத் தட்டுப்பாடு அபாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

இலங்கைத் தீவில் உணவுத் தட்டுப்பாடு அபாயம்

கொழும்பு, மே 21- இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (20.5.2022) கூறிய தாவது:

நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கு தேவை யான ரசாயன உரங்கள் எதுவும் இல்லை. இத னால், நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற் படும் அபாயம் இருக் கிறது. உலக அளவில் தற்போது உணவு நெருக்கடி நிலவுகிறது.

வரும் செப்டம்பர் முதல் மார்ச் வரையி லான சாகுபடி பருவத் துக்கு தேவையான உரங்களை பெற முயற் சித்து வருகிறோம். நாட் டின் இந்த நெருக்கடிக்கு கடந்தகால அரசின் நிர் வாகமே காரணம்.

நாம் திவாலாகும் நிலைக்கு வந்துவிட் டோம். இதுபோன்ற நிலை இலங்கையில் ஒரு போதும் இருந்தது இல்லை. நம்மிடம் தற் போது டாலரும் இல்லை. ரூபாயும் இல்லை. நாம் நிலை யான நிலையில் இல்லை. மக்களால் இனி யும் சுமையை தாங்க முடி யாது. இந்த இக் கட்டான சூழலில், தற்போதைய நிலையை தாங்கிக் கொள் ளுமாறு நாட்டு மக்கள் ஒவ்வொரு வரையும் கேட்டுக் கொள் கிறேன். 

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல நாட்களாகவே, பெட் ரோல், டீசல் வாங்குவ தற்கு மக்கள் சுமார் 12 மணி நேரம் வரை வரி சையில் காத்திருக்க வேண் டிய நிலை உள்ளது. 

தற்போது நிலைமை மேலும் மோசமாகியுள்ள தால், இதை கருத்தில் கொண்டு இலங்கை அரசு பல முக்கிய அறிவிப்புகளை நேற்று வெளி யிட் டுள்ளது.

பள்ளிகள் மூடல்

அரசு மற்றும் அரசு அனுமதி பெற்று இயங் கும் அனைத்து பள்ளி களும் 20-ஆம் தேதி (நேற்று) முதல் மூடப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பள் ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளி யாகவில்லை.

அதேபோல, அத்தி யாவசியப் பணியில் உள் ளவர்கள் தவிர மற்ற அதி காரிகள் 20-ஆம் தேதி (நேற்று) முதல் பணிக்கு வர வேண்டாம் என்று இலங்கை பொது நிர்வாக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலை யில், போக்குவரத்தை குறைக்கும் வித மாக இந்த நடவடிக்கை எடுக் கப்பட் டுள்ளது.

எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா கூறும் போது, “இலங்கை கடற் பகுதியில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ள பெட் ரோலை பெற நாட்டின் கைவசம் அந்நியச் செலாவணி இல்லை.

கப்பல் நிறுவனத்துக்கு ஏற்கெனவே ரூ.400 கோடி நிலுவைத் தொகை தர வேண்டும். அதை கொடுத்த பிறகே, மேலும் பெட்ரோல் வாங்க முடியும். எனவே, பெட் ரோல் பங்க்குகளில் மக்கள் காத்துக் கிடக்க வேண்டாம்” என்றார்.

சமையல் எரிவாயு உருளை, எரிபொருள் உள்ளிட்டவை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள் ளது. கொழும்பு நகரில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு உருளை விலை ரூ. 2,675 ஆக இருந்தது. அது தற்போது சுமார் ரூ.5 ஆயிரமாக உயர்ந்துள் ளது. உருளை வாங்கு வதற்காக 3-ஆவது நாளாக வரிசையில் நிற்பதாக முகமது ஷாஸ்லி என்ப வர் கூறினார்.

இலங்கைக்கு சுமார் 5,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வெளி நாட்டு வங்கிகள், நிறுவனங்களிடம் கடன் இருப்பதாக தெரியவந் துள்ளது. ஆனால், தற் போதைய சூழலில், கடனை திருப்பிச் செலுத்த முடி யாத நிலையில் இலங்கை உள்ளது என்று தெற் காசிய சென்ட்ரல் வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment