இலங்கையில் வரலாறு காணாத வன்முறை: பிரதமர் ராஜபக்சே பதவி விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

இலங்கையில் வரலாறு காணாத வன்முறை: பிரதமர் ராஜபக்சே பதவி விலகல்

கொழும்பு, மே 10- இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளா தார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்சே.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. நாடுமுழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு பலனற்று போனதை அடுத்து அதிபர் மாளிகைக்குள் ராணுவத்தினர் நுழைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி இருக்கிறது.

போராட்டத்தை ஒடுக்க கடந்த 6.5.2022 அன்று அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது, இருந்தபோதும் வன் முறை ஓய்ந்த பாடில்லை.

பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகை பகுதியில் நேற்று (9.5.2022) காலை முதல் போராட்டக் காரர்கள் பிரதமரின் இல்லம் நோக்கி முன்னேறுவதை தடுக்க ராஜபக்சேவின் ஆதரவாளர்களும் களத்தில் குதித் தனர்.

அலரி மாளிகை செல்லும் பாதையில் இருந்த வாக னங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. வன்முறையா ளர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொழும்பு அருகில் உள்ள நீர் கொழும்பு நகரில் ராஜபக்சே குடும்பத்தினருக்குச் சொந்தமான ஓட்டல் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

அதேபோல், கல்வி மற்றும் தோட்ட தொழில் துறை அமைச்சரான ரமேஷ் பத்ரனே வீடும் தீக்கிரையாக்கப் பட்டது. முன்னதாக  ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல வன்முறைக்கு பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில் அமரகீர்த்தி சென்ற வாகனம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வன்முறையாளர்களை நோக்கி அவர் துப்பாக் கியால் சுட்டதாகவும் பொதுமக்களிடம் இருந்து தப்பித்து ஓடிய அவர் ஒரு கட்டடத்தில் பதுங்கிக்கொண்டதாகவும் அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.


No comments:

Post a Comment