பாஜக ஆளும் கருநாடகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

பாஜக ஆளும் கருநாடகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம்

தேசிய குடும்ப நலத்துறை வெளியிட்ட ஆய்வுத் தகவல்

பெங்களூரு, மே 14-  தேசிய குடும்ப நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய் வில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் பாஜக ஆளும் கருநாடக மாநிலத்தில்தான் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

பெண்களுக்கு அதிக கொடுமைகள், தொல்லைகள் கொடுப்பது பற்றி தேசிய குடும்ப நலத்துறை ஓர் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் இந்திய அளவில் பெண் களுக்கு அதிக கொடுமைகள், தொல் லைகள் கொடுப்பதில் கருநாடக மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.

கருநாடக மாநிலத்தில் பெண் கொடு மைக்கு எதிராக 48 விழுக்காடு பேர் ஓட்டுப்போட்டு உள் ளனர். இதில் பீகார் மாநிலம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநி லத்திற்கு எதிராக 43 விழுக்காடு பேர் ஓட்டுப்போட்டுள்ளனர்.

இந்த ஆய்வுக்கு பிறகு எந்தெந்த வகைகளில் பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது குறித்தும் தேசிய குடும்ப நலத்துறை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மனதளவிலும், உடல் அளவிலும், பாலியல் அளவிலும் அதிக தொல்லைகள் மற்றும் கொடுமைகள் கொடுப்பது கண வர்கள்தான். இதுதவிர சில கணவர்கள் வெளியுலகிற்கு நல்லவர்களாக இருந் தாலும் மனைவிகளிடம் மட்டும் சைக்கோ போல் நடந்து கொடுமைப்படுத்துவதும் உண்டு என்று கூறப்படுகிறது. மேலும் பெண்களின் நடத்தை மீது சந்தேகம் அடைந்தும், அவர்களை கடுமையாக விமர்சித்தும் தொல்லை கொடுக்கப் படுகிறது.

குடும்ப சண்டையை காரணம் காட்டி பெண்கள் தாக்கப்படுவதும் அதிகரித்துள் ளது. இதில் காயம் அடையும் பெண்களை கணவரோ, அவரது குடும்பத்தினரோ காப்பாற்ற முன்வருவதும் இல்லை என்று தெரிகிறது.

இதில் கணவன்மார்கள் தங்களது மனைவிகளை கண் பகுதியில் தாக்குவதும், கை-கால்களை முறிப்பதும், கொடூரமாக தாக்குவதும் அதிகரித்து இருக்கிறது. பெண்கள் மீது தீவைக்கும் சம்பவங்களும் கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஏராளமான பெண்கள் குடும்ப பிரச்சினைகளை சகித்துக் கொண்டு சமூகத்தை மனதில் வைத்து தங்களுக்கான பிரச்சினைகளை வெளியே சொல்வதில்லையாம். 58 விழுக்காடு பெண்கள் பிரச்சினைகளை சகித்துக் கொள்ள முடியாமல் தங்கள் பெற்றோர் வீடுகளுக்கு சென்று விடுகிறார்களாம்.

மேலும் 27 விழுக்காடு பெண்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர் களிடம் பிரச்சினைகளை கூறி தீர்த்துக் கொள்வதும், 9 விழுக்காடு பெண்கள் சமூக அமைப்புகளின் உதவியை நாடு வதும், 2 விழுக்காடு பெண்கள் தாங்களே தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள் வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு விழுக்காடுத்திற்கும் குறைவான பெண் களே காவல்நிலையம் மற்றும் நீதிமன்றங் களுக்கு சென்று புகார் அளிப்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

No comments:

Post a Comment