பால்வெளி மண்டலத்தின் மய்யத்தில் மிக பெரிய கருந்துளையின் முதல் புகைப்படம் வானியல் வல்லுநர்கள் வெளியிட்டு உள்ளனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

பால்வெளி மண்டலத்தின் மய்யத்தில் மிக பெரிய கருந்துளையின் முதல் புகைப்படம் வானியல் வல்லுநர்கள் வெளியிட்டு உள்ளனர்

நாம் வசிக்கும் இந்த பூமி சூரிய குடும்பத்தில் வருகிறது.  சூரியனை மய்ய புள்ளியாக கொண்டு பூமி உள்ளிட்ட கோள்கள் அவற்றுக் குரிய வட்டபாதையில் சூரியனை சுற்றி வருகின்றன.

எனினும், சூரிய குடும்பம் அமைந் துள்ள பால்வெளி மண்டலத்தில் வெவ்வேறு நட்சத்திரங்கள், விண் மீன்கள், விண்கற்கள் என ஆச்சரி யமளிக்கும் பல விசயங்கள் காணப் படுகின்றன.

அவற்றில் கருந்துளையும் ஒன்று.  நம்முடைய பால்வெளி மண் டலம் உள்பட அனைத்து பால் வெளி மண்டலங்களும் இதுபோன்ற கருந்துளைகளை கொண்டிருக்கின் றன என வானியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.  இந்த கருந்துளை களின் மய்யத்தில் ஒளி மற்றும் பொருட்கள் உள்வாங்கப்படும்.  அவற்றை படம் பிடிப்பது என்பது மிக கடினம்.

ஆனால், பால்வெளி மண்டலத் தின் மய்யத்தில் மிக பெரிய கருந் துளையின் முதல் புகைப்படம் ஒன்றை வானியல் வல்லுனர்கள் வெளியிட்டு உள்ளனர்.  இதனை ஈவன்ட் ஹாரிசான் டெலஸ்கோப் என்ற பன்னாட்டு அமைப்பு ஒன்று வெளியிட்டு உள்ளது.  இதற்கு முன்பும் இதேபோன்றதொரு கருந் துளையை படம்பிடிக்க முயன்று அது தோல்வியில் முடிந்தது.

கடந்த 2019ம் ஆண்டில், ஈவன்ட்  ஹாரிசான் டெலஸ்கோப் குழுவா னது, 53 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள கருந்துளையின் புகைப்படம் ஒன்றை வெளியிட் டது.  எம்87* என பெயரிடப்பட்ட அந்த கருந்துளை நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள ஒன்றை விட 1,500 மடங்கு பெரியது.

தற்போது எடுக்கப்பட்ட கருந் துளை மிக அருகிலேயே உள்ளது.  இது, 27 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவிலேயே உள்ளது.  ஓர் ஒளி ஆண்டு என்பது 9.5 டிரில்லி யன் கிலோ மீட்டர்கள் ஆகும் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ஆகும்).

இந்த கருந்துளை புகைப்படம் எடுப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள 8 ரேடியோ தொலைநோக் கிகளை ஒன்றிணைத்து உள்ளனர் என மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மய்யத்தின் வானியல் வல்லுனர் வின்சென்ட் பிஷ் கூறுகிறார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கொள் கைப்படி கணக்கிட்டால், சூரி யனை புதன் கிரகம் சுற்றி வரும் வட்டபாதையின் அளவை இந்த கருந்துளை கொண்டது.

1990ஆம் ஆண்டு பால்வெளியி லுள்ள கருந்துளையை கண்டறிந்த தற்காக நோபல் பரிசு பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கலிபோர்னியா பல்கலை கழகத்தின் வானியல் வல்லுனரான ஆண்ட்ரியா கெஜ் கூறும்போது, கருந்துளைகளின் புகைப்படங்களை பற்றி நினைத்து பார்ப்பது என்பதே மிக கடினம் என கூறுகிறார். இந்த கருந்துளை கள், நம்முடைய சூரியனை போன்று 40 லட்சம் மடங்கு எடை கொண் டவை ஆகும் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment