செமஸ்டர் கட்டணம் கட்டாத 104 இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

செமஸ்டர் கட்டணம் கட்டாத 104 இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் நீக்கம்

புதுடில்லி, மே 14- செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால், உக்ரைனின் தனி யார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து, தமிழ்நாட்டு மாணவர்கள்உள்ளிட்ட 104 இந் திய மாணவர்கள் நீக்கப்பட்டுள்ள னர். உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால், அங்குள்ள தேசிய மருத்துவப் பல்கலைக் கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட் டனர். இதில் அதிகமாக சிக்கிய இந்தியரை மீட்க, சிறப்பு விமானங் கள் அமர்த்தப்பட்டன. இதன்மூல மாக, மார்ச் இரண்டாவது வாரம் வரை அங்கு பயிலும் இந்தியர்களில் சுமார் 5,000 தமிழர்கள் உட்பட 20,000 மாணவர்கள் மீட்கப்பட் டனர்.

இதையடுத்து அவர்கள் தங்கள் மருத்துவக் கல்வியை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தொடரும் வகையில் அனுமதி கோரி தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்டப் பல மாநிலங்களிலி ருந்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதை பரிசீல னைக்கு ஏற்ற ஒன்றிய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் ஆலோசனை கேட்டிருந்தது. இதன்  மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், போர் தொடங் கிய பின்னர் உக்ரைன் பல்கலைக் கழகங்கள் ஒரு சிறு இடைவெளி விட்டிருந்தன. பின்னர் தாய்நாடு திரும்பிய மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகளை தொடங்கின. இந்நிலையில், செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தை செலுத்தும்படி மாணவர்களுக்கு உக்ரைன் மருத் துவப் பல்கலைக்கழகங்கள் அறி வுறுத்தின.

இந்தியாவிலேயே மருத்துவக் கல்வியை தொடரலாம் என்ற நம்பிக்கையில் பலரும் செமஸ்டருக் கானக் கட்டணங்களை செலுத்த வில்லை. இதனால், உக்ரைனின், டினிப்ரோ மெடிக்கல் இன்ஸ்டி டியூட் எனும் மருத்துவப் பல்கலை கழகம், 104 இந்திய மாணவர்களை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட் டுள்ளது.

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்கள் தரப்பில் கூறுகையில், போர் தொடங்கி நாங்கள் மீட்கப் பட்ட போது இந்தியாவிலேயே எங்கள் கல்வி தொடரும் என்ற நம்பிக்கையை அரசுகள் அளித்தன. இதை நம்பி நாங்கள், பிப்ரவரியில் கட்ட வேண்டிய ஒரு செமஸ்டர் தொகை ரூ.1.5 லட்சத்தை, மூன்று மாதங்கள் அவகாசம் அளித்தும் செலுத்தவில்லை. இதனால் உக் ரைன் மருத்துவப் பல்கலைக்கழ கங்களும் மாணவர்களை நீக்கத் தொடங்கியுள்ளன. கேள்விக்குறி யாகிவிட்ட எங்கள் எதிர்காலத்தை சரிசெய்ய, மத்திய, மாநில அரசு களை எதிர்த்து நாங்கள் போராட் டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.

ஏற்கெனவே, இந்தியர்கள் 54 மாதங்களுக்கு குறைவானக் கல்வி பிரச்சினையால் பிலிப்பைன்சிலும், கரோனா வைரஸ் தொற்று பரவ லால் சீனாவாலும் பாதிக்கப்பட் டுள்ளனர். இச்சூழலில், உக்ரைனில் மருத்துவ படிப்பில் சேர்ந்து பாதியில் விட்டுவிட்டு வந்த இந்திய மாணவர்கள் தற்போது இங்கும் கல்வியை தொடர முடியாத நிலை உருவாகி உள்ளது.

No comments:

Post a Comment