விலைவாசி உயர்வை கண்டித்து 25 முதல் 31ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம்: இடதுசாரிகள் அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

விலைவாசி உயர்வை கண்டித்து 25 முதல் 31ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம்: இடதுசாரிகள் அழைப்பு

புதுடில்லி, மே 16- அத்தியாவ சிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகரிக் கும் வேலையில்லா திண் டாட்டம் ஆகிவற்றை கண்டித்து வருகிற 25 முதல் 31ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட் டம் நடத்த இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளன. 

இது தொடர்பாக இடதுசாரிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக் கையில், ‘கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மக் கள் மீது வரலாறு காணாத சுமையை ஏற்றி வருகிறது. கோடிக்கணக்கானோர் கடும் வறுமையில் தள்ளப் பட்டு உள்ளனர். முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் வேலையின்மை மக்களின் துயரங்களை அதிகப்படுத்துகிறது’ என்று குறிப்படப்பட்டு உள்ளது.

கடந்த ஓராண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை 70 சதவீதமும், காய்கறிகளின் விலை 20 சதவீதமும், சமையல் எண்ணெய் விலை 23 சதவீதமும், தானியங்களின் விலை 8 சதவீதமும் அதிகரித்துள் ளதாக குற்றம் சாட்டி யுள்ள இடதுசாரிகள், பெட்ரோலியப் பொருட் கள். எரிவாயு உருளையின் தொடர்ச்சியான விலை உயர்வு மற்றும் கோதுமை யின் கடுமையான தட்டுப் பாடு ஆகியவை பணவீக் கத்தை அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளன. இந்த கூட்டறிக்கையில் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட இடது சாரி தலைவர்கள் கையெ ழுத்து போட்டுள்ளனர்.

No comments:

Post a Comment