ஜனநாயகத்தின் தூண்கள் மீதான தாக்குதல் ஊடகவியலாளர்களை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய மத்தியப்பிரதேச காவல்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

ஜனநாயகத்தின் தூண்கள் மீதான தாக்குதல் ஊடகவியலாளர்களை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய மத்தியப்பிரதேச காவல்துறை

போபால் ஏப்.8 அரை நிர்வாண மாக காவல்நிலையத்தில் நிற்பவர் வேறு யாரும் அல்ல, பிரபல நாளிதழ் ஒன்றில் பணியாற்றி அந்த நாளிதழ் முழுக்க முழுக்க மக்கள் விரோத பாஜக ஆட்சியின் மோசடிகளை மறைத்து அக்கட்சியின் பத்திரிகைபோல் செயல்பட்டதால் அதிலிருந்து வெளியேறிய கனீஷ்க் திவார். இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து தனியாக யுடியூப் சேனல் ஒன்றைத் துவங்கினர்.

 குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமடைந்த அந்த செய்தி யு டியூப் சேனல் பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச அமைச்சர் கேதர்நாத் சுக்லாவின் ஊழல் குறித்த செய்தி ஒன்றை சான்று களோடு வெளியிட்டனர். இதனை அடுத்து அந்த செய்தி யாளர் மற்றும் அவரது குழுவி னரை காவல் துறையினர் அவர் களது அலுவலகத்தில் புகுந்து அடித்து அங்கிருந்தே அரை நிர்வாணமாக காவல்நிலையத் திற்கு அழைத்துவந்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் மற்றும் ஊடகவிய லாளர்கள் மீதான தாக்குதல் ஆகும். இருப்பினும் இப்போது வரை இந்தத் தாக்குதல் குறித்து எந்த ஊடகமும் வாய் திறக்க வில்லை என்று வேதனைக்குரியது.

ஊடகவியலாளரை ஜட்டி யோடு நிற்கவைத்ததற்கு காவல் துறை கொடுத்த புது விளக்கம்:

ஊடகவியலாளர்களை ஜட்டியோடு நிற்கவைத்ததற்கு காரணம் அவர்கள் தங்களின் ஆடைகளில் ஏதேனும் ஆயுதம் எடுத்து வந்துள்ளனரா என்று சோதனை செய்வதற்காகவும், அவர்கள் காவல்துறையை சிக்க வைக்க தங்களின் ஆடையைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்ற கார ணத்திற்காகவும்தான் அவர்களின் ஆடைகளை களைந்து நிற்க வைத்தோம் என்று விளக்கினர்.

No comments:

Post a Comment