தானோட்டிகளுக்கு வழிகாட்டும் வரைபடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 14, 2022

தானோட்டிகளுக்கு வழிகாட்டும் வரைபடம்!

ஒரு தானோட்டி வாகனம் சாலையில் சரளமாக செல்ல மிகவும் அவசியம் முப்பரிமாண டிஜிட்டல் வரைபடம். இந்த வரைபடம் சென்டிமீட்டர் துல்லியத்துடன் இருக்கவேண்டும். அப்போதுதான், சாலையில் விரையும் தானோட்டிகள், எங்கு போகவேண்டும், எந்த பாதையில் போனால் பக்கம், நெரிசல் கம்மி போன்ற தகவல்களை குழப்பமில்லாமல் தெரிந்துகொள்ள முடியும்.

இதனால்தான், ஜி.எம்.க்ரூயிஸ், ஜூக்ஸ், நியூரோ, சீனாவின் ஆட்டோ எக்ஸ், டாட்டா எல்க்ஸி போன்ற தானோட்டி வாகன தயாரிப்பாளர்கள், துல்லியமான டிஜிட்டல் வரைபடங்களை நம்பியுள்ளனர். இவர்களுக்கு அத்தகைய வரைபடங்களைத் தருவதற்கு சில்லுத் தயாரிப்பாளரான என்விடியா ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆசியா, அமெரிக்கா, அய்ரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள நகர்களின் விரிவான முப்பரிமாண வரைபடத்தைக் கொண்ட, 'டிரைவ் மேப்' தொழில்நுட்பம்தான் அது.கடந்த ஆறு ஆண்டுகளாக, வீடியோ கேமிரா, லைடார், ரேடார் போன்ற பல உணரிகளைக் கொண்ட கார்களை வைத்து, உலக நகரங்களின் வரைபடத்தை உருவாக்கியது 'டீப் மேப்.' இந்த வரைபடம் ஒரு செ.மீ துல்லியத்துடன் இருப்பதால், டீப் மேப் நிறுவனத்தை என்விடியாவே கையகப்படுத்தியது.

தற்போது உலக தானோட்டி வாகன தயாரிப்பாளர்களுக்கு டீப் மேப் தொழில்நுட்பத்தை வழங்க என்விடியா தயாராகிவிட்டது.சாலையின் மேல் உள்ள குறியீடுகள் முதல், சாலை முனையில் உள்ள சிக்னல்கள், மின் கம்பங்கள் வரை பல தகவல்களையும் கொண்டது இந்த டீப் மேப் நுட்பம். இதை வாங்கியதன் மூலம், தானோட்டிகள் சந்தையில் தவிர்க்க முடியாத சக்தியாகியிருக்கிறது என்விடியா. 

No comments:

Post a Comment