ஜப்பான் தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 14, 2022

ஜப்பான் தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள்

எதிர்கால நம்பிக்கை, விவசாயிகள்தான் என்ற தொலைநோக்கு அணுகுமுறையோடு டிராக்டர்களை விற்பனை செய்து வரும் சோலிஸ் யான்மர் நிறுவனம் சென்ற நிதியாண்டில் (2021-2022) 13 ஆயிரம் டிராக்டர்களை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது. இந்தியச் சந்தையில் நுழைந்த இரண்டே ஆண்டுகளில் இத்தகைய சாதனையை இந்நிறுவனம் புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் புதிய சாதனை குறித்து சோலிஸ் யான்மர் நிறுவன இணை நிர்வாக இயக் குநர்  ரமன் மிட்டல்  கூறுகையில், “மிகவும் கடினமான உழைப்பின் வெளிப்பாடாக இரண்டு ஆண்டுகளில் வரலாற்று சாதனை அளவாக 13 ஆயிரம் டிராக்டர்களை விற்பனை செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. யான்மர் நிறுவனத்துடனான கூட்டு ஒப்பந்தம் மிகச் சிறந்த பயனை அளித்துள்ளதோடு 100 ஆண்டு பாரம்பரியமிக்க ஜப்பானிய தொழில்நுட்பம் கிடைப்பதற்கும் வழியேற்படுத்தியுள்ளது. இது அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு புதுமையை தொடர்ந்து புகுத்த உதவும் என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment