இந்தியாவில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு - தவறான தகவல் என சுகாதாரத்துறை விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

இந்தியாவில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு - தவறான தகவல் என சுகாதாரத்துறை விளக்கம்

மும்பை, ஏப்.8 -புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ள தாக  தகவல் வெளியான நிலையில் அந்த தகவல் மறுக்கப் பட்டுள்ளது. 

மும்பையின் பிரஹன்மும்பை மாநகராட்சி நிர்வாகம், கரோனா வைரசின் புதிய  எக்ஸ்இ வகை  மாறுபாடு ஒரு நோயாளியிடம்  கண்டறியப்பட்டுள்ளது என்று  தெரிவித்தது. சீனாவில் பரவி வரும் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகிய நிலையில் அந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,  எக்ஸ்இ வகை  மாறுபாடு  என்று கூறப்படும் மாதிரி, மரபணு நிபுணர்களால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த மாறுபாட்டின் மரபணு அமைப்பு எக்ஸ்இ வகை மாறுபாட்டின் மரபணு படத்துடன் தொடர்புபடுத்தவில்லை என்று நிபுணர்கள் ஊகித்துள்ளனர்.தற்போதைய சான்றுகள் இது கரோனா வைரசின், எக்ஸ்இ வகை  மாறுபாடு என்று காட்டவில்லை என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் முதன் முறையாக ஒமைக்ரான் எக்ஸ்இ  என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் எக்ஸ்இ  வகை வைரஸ் 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment