ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தி மாநில நிதியைப் பறிக்காதீர் ஒன்றிய அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தி மாநில நிதியைப் பறிக்காதீர் ஒன்றிய அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 28- ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தி மக்கள்மீது சுமையை ஏற்றுவதா? மாநில நிதியைப் பறிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது:

கடந்த இரண்டாண்டு களாக அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலை களும் கடுமையாக உயர்ந்துள் ளன. குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் மக்கள் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில் வெல்லம், அப்பளம், சாக்லெட் மற்றும் வீட்டு உபயோகப் பொருட் கள் உட்பட 143 பொருட் களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை, ஒன்றிய அரசு பத்து சதவீதம் உயர்த்துவதாக செய்திகள் வெளியாகியுள் ளன.

ஏற்கெனவே, கரோனா நோய்த் தொற்று பரவல் நெருக்கடியால் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நிலையில், ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி உயர்வு திட்டம் வெந்த புண்ணில் வேல்பாய்ச் சும் செயலாகும். மேலும் மாநில அரசின் நிதியாதா ரத்தை பாஜக ஒன்றிய அரசு சட்டபூர்வமாக அபகரித்துக் கொள்வதால், தமிழ்நாட்டிற்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டு வரு கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்காமல் இழுத்தடித்து, வஞ்சித்து வருகிறது. 

இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்ற மாநில அர சின் கோரிக்கை மீது ஒன்றிய அரசு மவுனம் காத்து வருகி றது.

தாங்க முடியாத சுமையாக விலைவாசி உயர்வு தொடரும் நிலையில், 

அதனைக் கட்டுப் படுத்த வேண்டிய ஒன்றிய அரசு, பெரும் பன்னாட்டு நிறுவ னங்களுக்கு உதவும் வகையில் மக்கள் தலையில் வரிச் சுமையை ஏற்றுவதை கடுமை யாகக் கண்டிக்கிறோம். ஒன்றிய அரசின் வரி உயர்வு எவ் வகையிலும் ஏற்கத்தக்க தல்ல என்பதை சுட்டிக் காட்டி, ஜி.எஸ்.டி. வரி உயர்வு திட்டத்தை முற்றிலு மாக கைவிட வேண்டும்.''

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment