உக்ரைனில் வட இந்தியர்களுக்கே முன்னுரிமை அளிப்பதா? ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கையால் மாணவர்கள் வேதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 8, 2022

உக்ரைனில் வட இந்தியர்களுக்கே முன்னுரிமை அளிப்பதா? ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கையால் மாணவர்கள் வேதனை

திண்டுக்கல், மார்ச் 8-  உக்ரைனிலிருந்து வட இந்தியர்களை மீட்பதற்கே முன்னு ரிமை தரப்பட்டது என்றும் அனைத்து அறிவிப்புகளும் இந்தி மொழியிலேயே சொல்லப்பட்டன என்றும்  தமிழ்நாடு மாணவி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரசியா ராணுவ நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. அங் குள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழ்நாடு அரசும் ஒரு குழு அமைத் துள்ளது. அந்தக் குழுவினர், வெளியுற வுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினர்.  

இந்நிலையில் உக்ரைனிலிருந்து  தமிழ்நாட்டின் கொடைக்கானலை சேர்ந்த மருத்துவ மாணவி அனுசியா மோகன் 5.3.2022 அன்று நாடு திரும் பினார். அவர் கூறுகையில், அவசர கால கட்டத்தில் இந்திய அதிகாரிகள் வழங்கிய 10 அலைபேசி எண்களும் செயல்பட வில்லை. இதனால் கடும் அவதிக் குள்ளானோம். மேலும் வடமாநிலத் தவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. 

அனைத்து அறிவிப்புகளும் இந் தியில் இருந்ததால் தமிழ் நாடு உள் ளிட்ட தென்னிந்திய மாநி லங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். 

உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடந்த சில நாட்களாக போராடி னோம். தற்போது ஊர் திரும்பிய பின்னரே நிம்மதி அடைந்துள்ளோம். அங்கு தவித்து வரும் மற்ற மாணவர் களையும் விரைவில் மீட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment