கட்டாய தடுப்பூசிக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 8, 2022

கட்டாய தடுப்பூசிக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு

வாசிங்டன், மார்ச் 8- கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற் றும் தடுப்பூசி கட்டாயமாக் கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக வட அமெரிக்க நாடான கனடாவில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களும், தடுப்பூசி கட்டாயம் ஆக்கப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் வாசிங்டன் டி.சி.,யை நோக்கி லாரியில் பேரணி நடத்தி வருகின்றனர்.

    நூற்றுக்கணக்கான லாரி கள் வாசிங்டனை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. இவர்கள் வாசிங்டன் நகரை அடைந்ததும் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.


No comments:

Post a Comment