"ஆசிரியர் கல்வி & நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் நிலையான வளர்ச்சி" பன்னாட்டு கருத்தரங்கு: பல்துறை அறிஞர்கள் கருத்துரை வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

"ஆசிரியர் கல்வி & நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் நிலையான வளர்ச்சி" பன்னாட்டு கருத்தரங்கு: பல்துறை அறிஞர்கள் கருத்துரை வழங்கினர்

தஞ்சாவூர், மார்ச் 28- தஞ்சையில் பல்துறை அறிஞர்கள் கருத்துரை வழங்கிட நடைபெற்ற பன் னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சி யின் விவரங்கள் வருமாறு:

முதல் நாள் :

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்வியியல் துறை மற்றும் அர்ஜுன் சிங் நூலகம் சார்பில் "ஆசிரியர் கல்வியின் நிலையான வளர்ச்சி மற்றும் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் " என்னும் பொருண்மையிலான மூன்றாவது பன்னாட்டு கருத்தரங்கம், பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் அரங்கில் 25.3.2022 அன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது.

திருச்சிராப்பள்ளி பாரதி தாசன் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குநர் இணைப் பேராசிரியர், முனைவர். பாலசுப்ரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தின் கல்வியியல் துறைத்தலைவர் முனைவர்  தமிழ் வாணன் வரவேற்புரையில் உல கின் பல்வேறு மூலைகளி லிருந்தும் இந்த மாநாட்டில் பங்குபெறும் அனைத்துப் பிரதிநிதிகளையும் அவர் வரவேற்று, மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் தொலை நோக்குப் பார்வையைப் பற்றி விளக்கினார்.சிறப்பு விருந் தினர் அவர்களுக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தார். 

ஆய்வுக்கட்டுரைகள் அடங் கிய ஆய்வுக்கோவை மற்றும் குறுந் தகடு வெளியீடு நடை பெற்றது. 

பல்கலைக்கழக துணை வேந்தர் .வேலுசாமி ஆய்வுக் கோவையை வெளியிட சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண் டார். 

குறுந்தகடை பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட முனை வர் பி.விஜயலட்சுமி பெற்றுக் கொண்டார்.  

மனிதத்துவம் அறிவியல்  மற்றும் மேலாண்மை புல முதன் மையர் முனைவர்  விஜயலட்சுமி மற்றும் கல்வியியல் துறை  பேராசிரியர், முனைவர் மோகன சுந்தரம் ஏற்பாட்டாளர்களை வழிநடத்த வாழ்த்துரை வழங் கினார். 

பல்கலைக்கழக துணை வேந்தர், பேராசிரியர் வேலுசாமி அவர்கள் தலைமை வகித்து பெரிய வெற்றிக்கு, சுற்றுச்சூழல் அமைப்பு, மக்கள்தொகை வெடிப்பு, நிலையான கல்வியின் மூலம் மனித வளம் எவ்வாறு மேம்படுகிறது என வாழ்த்துரை வழங்கினார்.  அர்ஜுன் சிங் நூலக இயக்குநர் முனைவர் நர்மதா சிறப்பு விருந்தினர் பற்றிய முன் னுரை வழங்கினார். சிறப்பு விருந் தினர் முனைவர் பாலசுப்பிரமணி அவர்கள் பற்றிய விரிவான முன்னுரை வழங்கினர். 

சிறப்புரை டாக்டர்.ஆர்.பால சுப்ரமணி (இணைப் பேராசிரியர், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சிராப்பள்ளி.) கற்பித் தல் மற்றும் கற்றல் மேலாண் மையில் உள்ள மின்-வளங்களைப் பற்றி அவர் பேசினார், பல்வேறு ஆதாரங்களில் நூலக ஆதார புத்தகங்கள் கிடைப்பதையும் எடுத்துரைத்தார். 

இந்த பன்னாட்டு கருத் தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் , பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர் .

இறுதியில், முனைவர் . ராஜீ நன்றி உரை கூறினார். கருத் தரங்கில் பல் வேறு துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மற்றும் மாண வர்கள் பங்கேற்றனர்.  

இரண்டாம் நாள்:

பெரியார் மணியம்மை அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்வியியல் துறை மற்றும் அர்ஜுன் சிங் நூலகம் ஆகியவை சார்பில் "ஆசிரியர் கல்வி மற்றும் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் நிலையான மேம்பாடு " என்னும் பொருண்மையிலான மூன்றாவது பன்னாட்டு கருத் தரங்கத்தின் இரண்டாவது நாள் காலை 10.00 மணியளவில் இனிதே தொடங்கியது. 

முனைவர் சபீக் (ஆங்கிலத் துறை துணைப் பேரா சிரியர், நிஸ்வா பல்கலைக்கழகம் ஓமன்), "வளர்ச்சி நோக்கிய ஆசிரியர் கல்வி" என்னும் தலைப்பில் உரை யாற்றினார். 

ஆசிரியர் கல்வியின் தேவை கள், கல்வி குழு  அறிக்கைகள் ஆசிரியர் பயிற்சிய பற்றி விளக் கினார். நன்மைகளை சுட்டிக் காட்டினார்.

அடுத்து, முனைவர் அபிஷேக் குமார், விஞ்ஞானி, (மய்யம்)   "பாடங்கள் மூலம் கல்வியில்  நிலையான வளர்ச்சி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.கல்வியியல் துறையில் பல வலை தளங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். 

கல்வியின் வளர்ச்சி குறித்து தனது கருத்துகளை பதிவு செய்தார். 

அடுத்ததாக பல ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக் கையை விளக்கினார்கள்.மதியம் 2:30 மணியளவில் திருமதி.ஜெனி பர் பிளட்சர் (ரிஜன்ட் கல்லூரி, லண்டன்) "உளவியல் மற்றும் இணையதளம்" என்ற தலைப்பில்   செயலி மூலம் மாணவர்களிடம் உரையாற்றினார். 

உளவியலின் தன்மைகள் இந்த கரோனா காலத்தில் எவ் வாறு உதவியது என்பதனை விளக்கினார்.மாணவர்களின் கற்றல் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். 

மதியம் 3:00 மணியளவில் நிறைவு விழா தொடங்கியது .

இந்நிகழ்வை முனைவர்  சின்னப்பன் (முனைவர், தமிழ் வளர்ச்சி துறை, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்) சிறப்பு விருந் தினராக பங்கேற்றார்.

முனைவர்.நர்மதா, (இயக்குநர், அர்ஜுன் சிங் நூலகம்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார். உதவி பேராசிரியை அனு சுயா(எ) பிரியா பன்னாட்டு கருத்தரங்கின் அறிக்கையை வாசித்தார். உதவி பேராசிரியர் சேதுராஜன் சிறப்பு விருந்தினர் பற்றிய முன்னுரை வழங்கினார்.

முனைவர் சின்னப்பன் தன் சிறப்புரையில் கல்வியின் நிலை யான வளர்ச்சி குறித்தும் இணையதள பயன்பாடு குறித்தும் விளக்கினார். 

முனைவர். விஜயலட்சுமி, (மனிதத்துவம் அறிவியல்  மற்றும் மேலாண்மை புல முதன்மையர், கல்வி புல முதன்மையர், முனைவர். ஜார்ஜ்  மற்றும்  பதிவாளர் முனைவர். சிறீவித்யா ஆகியோர் தலைமையுரை வழங்கினார்கள். முனைவர். ஷஃபீக், (நிஸ்வா பல்கலைக் கழகம், ஓமன்) வாழ்த்துரை வழங்கினார்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான் றிதழ் வழங்கப்பட்டது. முனைவர் சுந்தரராசன், (உதவி பேராசிரியர்) நன்றியுரை வழங்கினார். நாட்டு பண் முழங்க கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.


No comments:

Post a Comment