ஒரு நிமிடத்தில்... இதயம் எத்தனை முறை துடிக்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

ஒரு நிமிடத்தில்... இதயம் எத்தனை முறை துடிக்கிறது?

தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் நம் இதயம், உடல் உள்ளுறுப்புகள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. இதயம் குறித்த சுவாரசியங்களைப் பார்ப்போமா?

இதயம் என்பது தசையால் ஆன ஓர் உறுப்பு. நமது உடலில் வேறெந்த தசையை விடவும் அதிகம் உழைப்பது இதயத் தசைகளே.

மனிதனின் இதயம் நிமிடத்துக்கு சராசரியாக 72 முறை துடிக்கும். ஒவ்வொரு நாளும் சுமார் 1 லட்சம் முறை துடிக்கும். மனிதனின் வாழ்நாளில் அதிகபட்சமாக 350 கோடி முறை இதயம் துடிக்கிறது. இதயம் ஒரு மணி நேரத்தில் 378 லிட்டர் குருதியை பம்ப் செய்கிறது. மணிக்கு 1.6 கி.மீ. வேகத்தில் குருதிக் குழாய்களுக்கு இதயம் அனுப்புகிறது.

இதயத் துடிப்பை அறிய மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் கருவி 1816இல் உருவாக்கப்பட்டது.

தாயின் வயிற்றில் 5 வாரக் கருவாக இருக்கும்போது தொடங்கும் இதயத் துடிப்பு, இறக்கும் வரை தொடர்கிறது.

ஒரு நிமிடத்தில் ஆணை விடப் பெண்ணின் இதயம் சராசரியாக 8 முறை அதிகம் துடிக்கிறது.

தான் துடிப்பதற்கான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்துகொள்வதால், உடலில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும் குறிப்பிட்ட நேரம் வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும்.

இதயத்தில் கை வைத்துப் பார்த்தால் லப்டப்..லப்டப் எனத் துடிப்பதை உணர்கிறோம் அல்லவா? இதயத்தில் உள்ள 4 அறைகளின் வால்வுகள் திறந்து மூடும் ஒலிதான் அது.

No comments:

Post a Comment