ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 16, 2022

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: நர்சிங் ஆபிசர் 106, ஜூனியர் அட்மினிஸ்ட் ரேட்டிவ் அசிஸ்டென்ட் 13, மெடிக்கல் லெபாரட்ரி டெக்னாலஜிஸ்ட் 12, ஸ்டெனோகிராபர் 7, ஜூனியர் இன்ஜினியர் (மெக்கானிக், சிவில்) 2, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1, டென்டல் மெக்கானிக் 1, அனஸ்தீசியா டெக்னீசியன் 1 என மொத்தம் 143 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : நர்சிங் ஆபிசர் பதவிக்கு டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது. வயது : 30.3.2022 அடிப்படையில் நர்சிங் ஆபிசர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 35, ஸ்டெனோகிராபர் 27, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 17.4.2022

தேர்வு மய்யம்: சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர். தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1500. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 1300. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 30.3.2022

விவரங்களுக்கு : https://jipmer.edu.in/announcement/jobs

No comments:

Post a Comment