தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு: நாடாளுமன்றத்தில் தி.மு.க. - திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 15, 2022

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு: நாடாளுமன்றத்தில் தி.மு.க. - திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி, மார்ச் 15- தொழி லாளர் வருங்கால வைப்பு நிதிக் கான வட்டி விகிதத்தை குறைப்ப தற்கு தி.மு.க., திரிணா முல் காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2021- - 2022ஆம் நிதியாண் டுக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து உள் ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு ஆகும்.

இது நாடு முழுவதும் தொழி லாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள் ளது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரம் நேற்று (14.3.2022) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித் தது. தி.மு.க., திரிணாமுல் காங் கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் இந்தப் பிரச்சினையை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தன.

அந்தவகையில் மக்களவை யில் பூஜ்ஜிய நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர். டி.ஆர்.பாலு இது தொடர்பாக கூறியதாவது:

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரமும் 7ஆவது சம்பள ஆணையம் நிர்ணயித்து உள்ளது. ஆனால் தொழிலாளர் ஓய்வூ திய திட்டத்தின் கீழ் வெறும் ரூ.1,000 மட்டுமே ஓய்வூதிய மாக வழங்கப் படுகிறது.

இந்த காயத்தை மேலும் கிளறும் வகையில், தொழிலா ளர் வருங்கால வைப்பு நிதிக் கான வட்டி விகிதமும் 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீத மாக குறைக்கப் படுகிறது. இது மிகவும் அபாயகர மான பிரச் சினை. இது நல்லது அல்ல,  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகி தத்தை மீண்டும் 8.5 சதவீத மாக நிர்ணயித்து, தொழிலா ளர் ஓய்வூதியத்தையும் குறைந்த பட்சம் ரூ.3 ஆயிர மாக நிர்ணயிக்க வேண்டும்.  

இவ்வாறு டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டார். 

திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவு கதா ராய் தனது உரையிலும், வட்டி விகிதம் குறைப்பு குறித்து கவலை வெளியிட்டார். 

இதுகுறித்து அவர் கூறும் போது, ‘சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை, தொழிலா ளர்களை நசுக்குவதற் காக அரசு எடுத்து கொள்ளக் கூடாது.ஏற்கெனவே தொழிலா ளர் வருங்கால வைப்பு நிதிக் கான வட்டி விகிதத்தை குறைத்து அரசு, வேலையை காட்டியுள்ளது’ என்று தெரி வித்தார்.

ஏர் இந்தியா மற்றும் நீலாஞ் சல் இஸ்பாட் நிகாம் லிமிடெட் நிறுவனங்களை விற்று விட்ட ஒன்றிய அரசு,எல்.அய்.சி. மற்றும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வரிசைப் படுத்தியிருக்கிறது எனக்கூறிய சவுகதா ராய், 36 பொதுத்துறை நிறுவனங்க ளையும் பங்கு விற் பனைக்கு பட்டியலிட்டுள்ள தாகவும் குற்றம் சாட்டினார். - விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை தனியார் நிறு வனங்களுக்கு விற்கவும், ரயில் வேயில் தனியார் முதலீட்டை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 இதற்கிடையே, தொழிலா ளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகித குறைப்பு பிரச்சினையை மாநிலங்களவையிலும்பூஜ்ஜிய நேரத்தின்போது எழுப்ப திரிணாமுல் காங்கி ரஸ் மற்றும் இடதுசாரிகள் முயன்றனர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அவைத்தலைவர் வெங் கையா நாயுடு, 

இதுகுறித்து முன் கூட்டியே தனக்கு தாக்கீது அளித்திருக்க வேண்டும் எனக் கூறிபிற அலுவல்களை தொடர்ந் தார்

No comments:

Post a Comment