தமிழின அடையாளம் தந்தை பெரியார்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 26, 2022

தமிழின அடையாளம் தந்தை பெரியார்..!

தமிழர்களின் எழுச்சிக்கும், தமிழ்நாட் டின் மாட்சிக்கும் தன்னிகரற்றத் தொண்டாற் றிய தலைமகன் நம் சிந்தையில் நிறைந்த தந்தை பெரியார். இன இழிவால் தாழ்த்தப் பட்டு,  ஆரிய சதிகளால் வீழ்த்தப்பட்டு அதல பாதாளத்தில் அடையாளமிழந்து, வீழ்ந்து கிடந்த தமிழினத்தைத் தட்டி எழுப்பி, தன்மானத்தை உணர்த்தி, பகுத்தறி வைப் புகட்டிய பகலவனாம் பெரியாரால் தமிழினம் விடியலின் ஒளிக்கீற்றைக் காண முடிந்தது.

சமுதாயத்தின் அனைத்துத் தீமைகளுக் கும் ஆதாரமாய், ஆணிவேராய்த் திகழ்ந்த ஆரிய வருணாசிரம அபாயங்கள் குறித்து தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய  தந்தை பெரியாரை இக்காலத்தில் நன்ன டத்தை இழந்த நடிப்புத் தலைவர்கள் சிலர், கன்னடத்தைச் சேர்ந்தவராய்க் காட்டிட முயல்கின்றனர். அவர் தமிழரே இல்லை யென்று தடித்தனமாய்ப் பேசுகின்றனர்.

வெறி ஆரியத்தை வேறுவழியாக இறக்குமதி செய்ய, பெரியாரியத்தையும், திராவிடத்தையும் தமிழர்க்கு எதிரான தத் துவம் போல சிறுமதியாளர்கள் சித்திரிக்க முயல்கின்றனர். இத்தகைய நச்சுக் கிருமி களை அடையாளங்காட்டி அம்பலப்படுத் தும் வகையிலும், பெரியாரியப் பேரொ ளியை இளையதலைமுறைக்கு எடுத்தியம் பும் முறையிலும் பண்பட்ட ஊடகவியலா ளர் ப.திருமாவேலன் ஆதாரங்களை அணி வகுத்து எழுதியுள்ள ‘இவர் தமிழரில்லை என்றால் வேறு எவர் தமிழர்’ என்றப் பெரு நூல் காலத்தின் தேவையை நிறைவேற்றும் கருத்துக் கொடை என்றால் மிகையில்லை.

"பேரறிவாளர் அவர்,

பெரியார் என்னும் ஈவெரா

யாரறிவார் பெருமை தமிழா"

என்று தொடங்கும் இசைமுரசு நாகூர் ஹனீபா பாடிய  பாடலில், 

‘தூங்கிக் கிடந்த உன்னைத்

தூக்கித் துடைத்தெடுத்துத்

தாங்கித் தரையில் விட்டார்

தாத்தாவாம் நம்பெரியார்’

என்று எழுதியிருப்பார் பெரும்புலவர் ஆபிதீன்.

"தொண்டு செய்து பழுத்தப்பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார் - பார்

அவர்தாம் பெரியார்"

என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதி தாசனால் கொண்டாடப்பட்ட தந்தைப் பெரியாரை, நடிப்புத் தலைவர்கள் குறை பேசுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல, இதற்கு இடம் கொடுத்த நம் தமிழ் மக்களின் விழிப்புக்கும் எதிர்வினைக்கும் உரியது ஆகும்.

தந்தை பெரியாரைப் பற்றி அவதூறு பேசும் அரைவேக்காடுகளுக்கு ஆதாரங்க ளோடு பதிலளிக்கத் துடித்த இனமானத் தமி ழர்களின் கையில் கிடைத்த கருத்தாயுத மாகவே ப.திருமாவேலனின் இந்நூல் திகழ்கிறது என்றால் மிகையில்லை.

வியந்தோதல், விதந்தோதல், விரித்து ரைத்தல் ஆகியன இன்றி பத்திக்குப் பத்தி ஆதாரங்களை அணிவகுக்கச் செய்திருப் பது இந்நூலின் தனிச்சிறப்பு எனலாம்.

தமிழர்களின் உரிமையை எந்நிலையி லும், எவ்விடத்திலும் விட்டுக்கொடுக்காமல் போராடி வென்ற தந்தை பெரியார், தமிழ் நாட்டின் எல்லைகளைக் காப்பதிலும் மீட்ப திலும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை இந்நூல், 823ம் பக்கம் முதல் 947ம் பக்கம் வரை துல்லியமான ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது.

குறிப்பாக தெற்கெல்லைப் பகுதிகளான திருவிதாங்கூர், நாஞ்சில் நாடு (குமரி மாவட் டம்) ஆகியவற்றை மீட்பதற்கு நடந்த போராட்டங்களில் பெரியார் எவ்வளவு ஈடுபாடு காட்டினார், எத்தகைய ஒத்து ழைப்பை நல்கினார் என்பதை குடிஅரசு, விடுதலை நாளேடுகளில் வெளிவந்த செய்திகளின் ஆதாரங்களோடு பதிவு செய்துள்ள நூலாசிரியர் திருமாவேலன், இதன் மூலம் திராவிடத்தின் மீது சேறுவாரி இறைக்கும் தீரா மனநோய் கொண்டோரின் திரிபு வாதங்களை தகர்த்தெறிந்து விடுகிறார்.

‘வைக்கம் வீரர்’ என்ற பட்டத்தை வர லாறு பெரியாருக்கு வழங்கியது. அனைத்து (இந்து) மக்களின் ஆலய நுழைவு உரிமைக் காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அருவிக்குத்தி சிறையில் ஒரு மாதமும், கோட்டயம் சிறையில் ஒரு மாத மும் அடைக்கப்பட்டிருந்தார். 

1924ம் ஆண்டில் அய்ந்து மாத காலம் கேரள மாநிலம் வைக்கத்தில் தங்கி வரலாற் றுச் சிறப்புமிக்கப் போராட்டம் நடத்தி வாகை சூடினார். வெற்றி விழாக்களில் பங்கேற்றார். குடிஅரசு 29.11.1925 தேதியிட்ட இதழில் இச்செய்தி பிரசுரமாகியுள்ளது.

“வைக்கம் சத்யாகிரகத்திற்கு விரோதி யாயிருந்தவர்கள் பிராமணர்களே தவிர, அரசாங்கத்தார் அல்ல என்பதை அரசாங் கத்தார் நிரூபித்துக் காட்டிவிட்டார்கள்” (குடிஅரசு 6.12.1925) என்றும் தந்தை பெரியார் பதிவு செய்துள்ளார்.

1926ம் ஆண்டு ஜூன் மாதம் ஆலப் புழையில் நடந்த திருவனந்தபுரம் தொழிலா ளர் மாநாட்டிற்கு தந்தை பெரியார் தலைமை வகித்து, டி.கே.மாதவன் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளார். 8.5.1929 அன்று திரு விதாங்கூர் சுயமரியாதை இயக்கம் நடத்திய ஆலயப் பிரவேச மாநாட்டிலும் 9.5.1929 அன்று பாலக்காட்டிலும் தந்தை பெரியார் உரையாற்றியுள்ளார். (குடிஅரசு 19.5.1929)

கேரளத்தின் அரசியல் தளத்தில் தன் கொள்கைக்கான களத்தை அமைத்து, எழுச்சியூட்டிய தந்தை பெரியார், தமிழ் நாட்டின் எல்லைகளைக் காப்பதில் சமரச மற்று களமாடியுள்ளார். திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின் ஆணிவேராய் இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரை தந்தை பெரியார் ஹிட்லரோடு ஒப்பிட்டு கடுமை யாக விமர்சித்துள்ளார் (விடுதலை 26.8.1938)

இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்த போதும் ராஜாஜியின் ஆணவம் அதிகரிக் கிறது. சட்ட மறுப்புப் போர் வலுத்தாலும் சர்.சி.பி.ராமசாமியின் ஆணவம் வலுத்து வருகிறது.

திருவிதாங்கூரில் ஒரு அய்யரும், சென் னையில் ஒரு ஆச்சாரியாரும், காஷ்மீரத் தில் ஒரு அய்யங்காரும் மக்களின் சுதந்திரத் திற்கு எமனாய் முளைத்திருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு நாடாளும் அதிகாரம் கிடைத்தால் ஏழைகளுக்கு ஏற்படும் கதியை திருவிதாங்கூரும், சென்னை மாகா ணமும் காஷ்மீரமும் விளக்கிக் காட்டுகிறது. (குடிஅரசு 25.9.1938) என்று நெருப்புக்கனல் தெறிக்க தலையங்கம் தீட்டியுள்ளார் தந்தை பெரியார்.

1940 முதல் 1960 வரை தெற்கெல்லைப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து நின்றுள்ளார் தந்தை பெரியார். இக்கால கட்டத்தில் பெரியாரின் அணுகுமுறைகள் தமிழ்நாடு தமிழருக்கே, திராவிட நாடு திராவிடருக்கே பிறகு தமிழ்நாடு தமிழருக்கே என மாற்றங்களைக் கண்டுள்ளன.

தென் எல்லையில் வாழ்ந்த தமிழர்கள் கொச்சி சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ் தானம், அய்க்கிய கேரளம், கேரள மாநிலம் என எதனுடனும் இணையாமல் தமிழ்நாட் டோடு தான் இருக்கவேண்டும் என்பதில் பெரியார் உறுதியோடு இருந்துள்ளார்.

இந்த உண்மைகளை ப.திருமாவேலன் பல்வேறு தரவுகளுடன் வெளிப்படுத்தியாக வேண்டிய காலத்தின் கட்டாயத்தை ஏற் படுத்தியவர்கள், கருங்காலிகள் என்றாலும் கூட அவர்களுக்கு நாம் நன்றி கூறுவது கடமையாகும்.

பெரியாரை தமிழினத் துரோகியாக அவர்கள் அவதூறு செய்யாமல் இருந்திருந் தால் இந்த வரலாறுகள் வெளிப்படாமல் போயிருக்கும்.

பெரியாரின் பெருமைகளையும், தமிழ் இனத்துக்கு அவர் செய்த ஈகங்களையும் இளைய தலைமுறையினருக்கு இனமான எழுத்தாளர்கள் கொண்டுபோய் சேர்ப்ப தற்கு தமிழின எதிரிகள் மட்டுமல்ல, இனத் துரோகிகளும் கூட காரணமாகி இருக்கிறார் கள். திருவிதாங்கூர் தமிழர் போராட்டத்தின் மாலுமியாக மார்ஷல் நேசமணியையும், திசைமானியாக ரசாக்கையும் சொல்வார் கள். ரசாக் திருவிதாங்கூர் - தமிழ்நாடு காங் கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் (1947-1952), மாநிலங்களவை உறுப்பினராகவும் (1952-1957) பதவி வகித்தவர்.

மார்ஷல் நேசமணியுடன் ரசாக் இணைந்து ‘திரு கொச்சியில் எஃகு தீ ஆட்சி’ என்ற ஆங்கில நூலை எழுதினார். அந்நூல் வெளிவந்த இரண்டு மணி நேரத் திலேயே திருவிதாங்கூர் அரசால் தடை செய்யப்பட்டது.

திருவிதாங்கூர் போராட்ட வரலாறு களை உள்ளடக்கி ‘நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்’ என்ற நூலை 1990ல் ரசாக் எழுதி யுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பைப் பிரி வின் கவுரவச் செய்தியாளராக இலங்கை, ஆப்கனிஸ்தான் நாடுகளில் பணியாற்றி யவர் இவர்.

இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள நுள்ளிவிளை ஏ.சுவாமிதாஸ், தந்தை பெரியாரின் பேராதரவையும் தமிழர்கள் திருவிதாங்கூரில் காவல்துறையால் ஒடுக் கப்பட்ட போது பெரியார் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, தமிழர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை நிறுத்தப்படாவிட்டால், தமி ழகத்திலிருந்து மலையாளிகளை அடித்துத் துரத்துவோம் என்று பேசி, அதனால் கேரள காவல்துறையின் ஒடுக்குமுறை முடிவுக்கு வந்ததையும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் மார்ஷல் நேசமணி தம் கையால் மாலை அணிவித்த ஒரே தலைவர் பெரியார் தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலுக்குள் பயணம் செய்தால் நுண் ணிய வரலாற்று உண்மைகள், அணிவகுத்து நிற்கின்றன.

தமிழ் இனத்துக்குத் தந்தை பெரியார் செய்துள்ள தன்னிகரற்றத் தொண்டுகளைப் படிக்க படிக்க சிலிர்ப்பு ஏற்படுகிறது.

இதை ஒரு தேனி போல் தேடியலைந்து திரட்டித் தந்துள்ள திருமாவேலன் அவர் களின் உழைப்பை நினைத்தால் வியப்பு ஏற்படுகிறது.

அவதூறுகளைத் தடுக்கும் கேடயமா கவும், அறிவார்ந்த களத்தின் ஆயுதமாக வும், கருத்தியலுக்கு ஒரு கருவூலமாகவும் திகழும் இந்நூல், திராவிட இயக்க எழுச்சி இலக்கணத்தைத் தெரிவிக்கும் நன்னூல்.

நூலிழையில் நேரும் அபாயங்களில் தமிழர்கள் தடுமாறி விழுந்து தடம் மாறிடா மல் காக்க, தக்க நேரத்தில் தரப்பட்ட ஊன்று கோலாகவே இந்நூலைக் கருதலாம்.

திருமாவளவன் என்ற கரிகாலச்சோழன் கட்டிய கல்லணை, காலங்கள் பல கடந்து சமுதாயத்திற்குப் பயனளிக்கும் வரலாற்றுச் சான்றாக நிற்பது போல, திருமாவேலன் வரலாற்று வரிகளால்  கட்டிய இந்தச் சொல் அணையும், காலம்பல கடந்து தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயனளிப்பதாக.

No comments:

Post a Comment