ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 26, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: நேரு குடும்பம் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும் என்று வரலாற்று ஆய் வாளர் ராமச்சந்திர குகா குறிப்பிட்டுள்ளது சரியா?

- தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: காங்கிரசுக்கு நேரு குடும்பத்தின் தொண்டு, தியாகம் மிகப்பெரியது, அவர்களில் ராகுல் காந்தி தான் தற்போது ஆர்.எஸ்.எஸுக்கு கொள்கை எதிரி. மற்ற குறை கூறுவோர் திண்ணைக் கச்சேரி செய்யும் மேட்டுக்குடி மேல்மட்டத்தார். சாதாரண மக்களோடு இவர் பழகும் அளவுக்கு யாரும் இல்லை - எனவே அக்கருத்து நூற்றுக்கு நூறு இன்று சரியானதல்ல. வேண்டுமானால் பொறுப்பினை பரவலாக்கி காங்கிரசை உண்மை யான வெகு மக்கள் இயக்கமாகக் கட்டுவதே முதற் பணியாக இருக்க வேண்டும்.

- - - - -

கேள்வி: தொழிலாளர் வைப்பு நிதியின் வட்டியைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதாகாதா? அரசியல் கட்சிகள் பெரிய அளவில் எதிர்க்கவில்லையே ?

- .மணிமேகலை, வீராபுரம்

பதில்: எதிர்க்க வேண்டியவை-ஒவ்வொரு முறை யும் ஒவ்வொரு பிரச்சினையாக வைப்பதால். எத்தனை பிரச்சினைகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே நேரத்தில் குரல் கொடுக்க முடி யும்?

- - - - -

கேள்வி: ஒரு சில மதவிழாக்களில் நட்புரீதியாக பங்கேற்பதால் ஏற்படும் விமர்சனத்தை தவிர்க்க, எல்லா மத விழாக்களிலும் பங்கேற்பது மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளுக்கு சரியான அணுகு முறையா?

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

பதில்: தவறானது மட்டுமன்று மிக தற்கொலைக் குச் சமம். போதையை ஒழிக்க நாமும் குடிக்கலாம். அப்போதுதான் அவர்களுடன் கலந்து அதை ஒழிக்க வாய்ப்பு ஏற்படும் என்று சொல்வது மாதிரியான கேலிக்கூத்து!

- - - - -

கேள்வி: பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டாலும், பெண்களுக்கு திருமண உதவித் திட்டங்கள் நிறுத்தப்பட்டது சரியா?

- கனிமொழி, சோழங்குறிச்சி

பதில்: திருமணத்தைவிட கல்வியே முக்கியம். திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக் கலாம். கல்வியைக் குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது முக்கியம். அத்திட்டம் பற்றி மறுபரிசீலனை வர வேற்கத்தக்கதே!

- - - - -

கேள்வி: உச்ச நீதிமன்றம் அநீதியான தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், சிதம்பரம் கோயில் தீட்சதர்களின் கொள்ளைகளைத் தடுக்க என்ன தான் வழி?

- அன்புமணி, காட்டுமன்னார்கோயில்

பதில்: புதிய சட்டத்தை - பலமான சட்ட அடிப்படையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றுவதே சரியான தீர்வாக அமையும்!

- - - - -

கேள்வி: காவல்துறை - நிகழ்ச்சிகள் நடத்துவதில் நம்மிடம் காட்டும் கெடுபிடிகளை சங்கிகளிடம் காட்டுவதில்லையே - மதவாத சக்திகளிடம் தமிழ்நாடு அரசு திணறுகிறதா?

- .ஆதவன், சைதாப்பேட்டை

பதில்: சரியான யதார்த்த நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் - காவல்துறையினர் சங்கிகளை கண்டு மென்மையான அணுகுமுறை களைக் கடைப்பிடிப்பது தி.மு.. ஆட்சித் தலை மையை கொஞ்சம் கொஞ்சமாக கீழறுப்பதற்குச் சமம்! புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்!

- - - - -

கேள்வி:  காங்கிரஸ் கட்சிக்குள் பா..., ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா அமைப்புகளின் சிலீப்பர் செல்களாக உள்ள  கருப்பு ஆடுகளை முழுமையாக அகற்றினாலே அக்கட்சி மீண்டும் எழுச்சி பெறும் என அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும்  தெரி விக்கின்றனரே?

- மன்னை சித்து , மன்னார்குடி. 1.

பதில்: நூற்றுக்கு நூறு சரியான பார்வை. தேவை யான நடவடிக்கை அதில்தான் உள்ளது!

- - - - -

கேள்வி: டில்லியில் ஓராண்டு தொடர்ந்து விவசாயிகள் நடத்திய போராட்டம்  .பி. தேர்தலில் எதிரொலிக்கவில்லையே ஏன்?

- இராசு.மணி, காட்பாடி 

பதில்: எதிர்க்கட்சிகள் அதனை தக்க வகையில் பயன்படுத்தி, ஒற்றுமையைக் காட்டாததின் விளைவு அது! மகா வெட்கக்கேடு.

- - - - -

கேள்வி: ஒரு காலத்தில் அய்யா தலைவராக இருந்த சிக்கைய நாயக்கர் கல்லூரி அரசுக் கட்டுப் பாட்டுக்குச் சென்றுள்ளதே - தங்கள் கருத்து?

- .தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: அரசு கட்டுப்பாட்டுக்குள் சென்றதுதான் சரியான முடிவு. அய்யா தலைமைப் பொறுப்பிலி ருந்து நீங்கி பல ஆண்டுகள் ஆகி விட்டதே! கல்லூரி நன்றாக நடக்க அதுவே சரியான வழி.

- - - - -

கேள்வி: தந்தை பெரியார் சிந்தனைகளை பல மொழிகளில் பரப்ப அரசு நிதி ஒதுக்கியுள்ளதை - திராவிடர் கழகத்திற்கான பின்னடைவாக சிலர் பரப்புகிறார்களே?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல் லாம் மஞ்சள் தானே!

No comments:

Post a Comment