மூட்டு வலியை குணமாக்கும் காராமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 14, 2022

மூட்டு வலியை குணமாக்கும் காராமணி

வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் ருசி உணவு காராமணி என்று அழைக்கப்படுகிறது. குழம்பு, பொரியல், அவியல், துவையல் எனப் பல வகைகளில் சமைத்து உண்ணப்படும் இந்த காராமணியில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

*காராமணியில் கணிசமான அளவு ‘கோலின்’ என்ற வைட்டமின் ‘பி’ இருப்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரல் கோளாறுகளை குணப்படுத்தும்.

*சிறுநீர் பிரியாது அவதிப்படுபவர்கள் காராமணியுடன் சிறிய வெங்காயம் நறுக்கிப் போட்டு கசாயம் செய்து பருகிவர சிறுநீர் நன்கு பிரியும்.

*காராமணியுடன் வாழைப்பூ, பூண்டு சேர்த்து துவரன் வைத்து சாதத்துடன் சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும். இதனை அவித்து அத்துடன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சாப்பிட்டு வர உடம்பிலுள்ள கழிவுகளையும், விஷப் பொருட்களையும் வெளியேற்றும்

No comments:

Post a Comment