திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 14, 2022

திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு

 சென்னை, மார்ச் 14 திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று (13.3.2022) திறக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள் ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்து சென்னை விமான நிலையம் - வண்ணை  நகர் இடையே முதல் வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 2ஆம் வழித்தடத் திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரு கிறது. அதை தொடர்ந்து, வடசென்னை மக்கள் கோரிக்கைகை ஏற்று வண் ணை நகரில் இருந்து விம்கோ நகர் வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால், திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிறுத்தம், விம்கோ நகர் பணிமனை ஆகியவற்றில் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் அங்கு மெட்ரோ ரயில் நிறுத்தப்படாமல், அதற்கு அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு வந்தது.

இதனால், மேற்கண்ட பகுதி மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில், விம்கோ நகர் பணிமனை, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிறுத்தத்தில் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இதை யடுத்து நேற்று காலை முதல் மேற்கண்ட 2 இடங்களும் பயன்பாட் டிற்கு வந்துள் ளது. அதே நேரத்தில், திருவொற்றியூர் நிறுத்தத்தில் பயணி களுக்கு தேவையான அனைத்து வசதிகள் செய்யப்பட்டிருந் தாலும் நகரும் படிக்கட்டுகள் இன்னும் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மின் தூக்கிகள் கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளன. இருப்பினும் திரு வொற்றியூர் தேரடியில் நேற்று காலை முதல் மெட்ரோ ரயில் நின்று செல்ல தொடங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 3,116 பேருக்கு கரோனா தொற்று

புதுடில்லி,மார்ச் 14- நாடு முழுவதும் கரோனா தொற்றின் பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம்  நேற்று (13.3.2022) வெளியிட்டுள்ள தகவ லின்படி, புதிதாக 3,116 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்த தகவல் வருமாறு,

கரோனாவால் புதிதாக 3,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 4,29,90,991 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவில் இருந்து 4,24,37,072 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 5,559 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனை யில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 38,069 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்த உயிரி ழப்பு 5,15,850 என்றளவில் உள்ளது.

No comments:

Post a Comment