பிரச்சாரங்களால் தமிழகமளந்த பெருமகன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 12, 2022

பிரச்சாரங்களால் தமிழகமளந்த பெருமகன்!

அய்யாவின் பொய்யாத நம்பிக்கையாய் ஆரியத்தை அலறவைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. (மார்ச் 18)

நாற்பத்தி நான்கு ஆண்டுகளில் தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் இல்லாத நிலையில் தமிழ் சமுதாயமும் இயக்கமும் எதிர்கொண்ட அறைகூவல்கள் கணக்கிலடங்காதவை.

பத்து வயதுச் சிறுவனாக தமிழகத்திற்கு அறிமுகமாகி மேசைகள் மீது நிற்க வைத்து பேச வைக்கப்பட்டவர். அந்த வயதில் தொடங்கிய கால்கள் இன்று வரை ஓய்வு எடுத்துக் கொள்ளவே இல்லை தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிற்றூரும் இவருக்கு அத்துப்படி.

89 ஆண்டு வாழ்நாளில் 79  ஆண்டு பொது வாழ்க்கையை உடையவர்.

அதில் 44 ஆண்டுகள் தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.

தமது சுகபோக ஆதிக்கத்திற்கு எதிராக நிற்கும் இந்த இயக்கத்தை அழிக்கும்  முயற்சியில் பார்ப்பனர் ஒரு புறம் என்றால், மறுபுறத்தில் தங்கள் சுயநலத்தால் விளம்பரத்திற்கு ஆரியத்திடம் விலை போன இனத்துரோகிகள்.  இவர்களுக்கு மத்தியில் இந்த இயக்கம் வீறுநடை போட்டு வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது என்றால் அதன் அச்சாணியாக  திகழ்ந்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

 சமூகநீதியை அழிக்கத் தொடர்  முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அந்தச் சதியையை அரசியல் கட்சிகளிடமும் அரசாங்கத்திடமும் மக்களிடமும் தொடர்ச்சி யாக கொண்டு சென்று அத்தகைய முயற்சிகளை முறியடித்ததில்  அதில் அவர் பங்கு மிக அதிகம்.

சமூக நீதி பாதுகாப்பு என்று எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு என்னும் நம் மக்களின் பிறப்புரிமைக்கு இரண்டு முறை ஆபத்து ஏற்பட்டபோதும், அவற்றை எதிர்த்து எதிர்ப்புகளை உடைத்து காப்பாற்றியவர்.

1979 வருமான வரம்பாணையை எதிர்த்துப் போராடி ஒழித்ததுடன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அளவு அதிகப்படுத்த காரணமாகத் திகழ்ந்தவர். மீண்டும் அதற்கு ஆபத்து நீதிமன்ற உருவில் வந்த போது அதையும் எதிர்த்து அரசுக்கு வழிகாட்டி சட்டரீதியான பாதுகாப்பை பெற்றுத்தந்தவர்,

வஞ்சிக்கபடும் தமிழ்நாட்டின் உரிமைகள், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு, மதவாதச் சக்திகளை எதிர்த்து தடுத்து நிறுத்தியமை, ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்டம், மாநில உரிமைகள் பாதுகாப்பு, கல்வி உரிமை பாதுகாப்பு மற்றும் நுழைவுத்தேர்வு எதிர்ப்பு என்று அத்தனை பணிகளிலும் பிரச்சாரத்தாலும் போராட்டத்தாலும் வெற்றிக்கான திருப்பத்தை தந்தவர். 

தமிழ்நாட்டின பிற தலைவர்களிடம் இருந்து வேறுபட்டு புதுமையான பிரச்சாரம் முறையில் மக்களை திரட்டுபவர்.

ஒரு பிரச்சினை குறித்து ஒரு நகரத்தில் பொதுக் கூட்டத்தில் அல்லது ஓர் அரங்கத்தில் பேசிவிட்டு அறிக்கை வெளியிட்டு வாளாவி ருந்தால் அது எல்லா மக்களிடமும் விழிப்புணர்வை, எழுச்சியை உருவாக்காது என்பதில் கவனமாக இருப்பவர்.

தலைநகரில் அவர் கொடுக்கும் குரல் தமிழகத்தின் கிராமங்கள் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு அத்தகைய பரப்புரைப் பணிகளில் தம்மையே முதல் களப் பணியாளராக, பிரச்சாரகராக அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுபவர்.

தமிழ்நாட்டில் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தொடர் பிரச்சாரம், ஒரு நாளைக்கு மூன்று கூட்டங்கள் பத்துக்கு மேற்பட்ட சொற்பொழிவாளர்கள்' புத்தகம் பரப்புரைக்குத்  தனி வாகனங்கள் என்று தொடர் பிரச்சாரத்தை திட்டமிட்டு நடத்தி வருபவர்.

அவை ஏற்படுத்திய விளைவுகள் தான் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69% விழுக்காடு இடஒதுக்கீடு, அதுவும் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புடன். 

தொடர் பிரச்சாரக் கூட்டங்கள்

 ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணையினை எரிக்கும் போராட்டம் நாடு முழுவதும் தொடர் பிரச்சாரம்.

29.10.1979 ஈரோட்டில் தொடங்கி, கோவை, தருமபுரி, தென்னாற்காடு, வட ஆற்காடு தஞ்சாவூர், திருச்சி, சேலம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி

01.11.1979 இல் பிரச்சாரம் முடித்து போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். 

26.11.1979 அன்று தமிழகம் முழுவதும் ஆணை எரிப்பு கிளர்ச்சிக்கு தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

 “திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல என்றாலும் அரசியலையே பாதிக்க செய்யும் வலிமை அதற்கு உண்டு” என கரண்ட் பத்திரிக்கை  எழுதியது.

20.11.1979-(சென்னை - திருச்சி) - (திருச்சி - நாகூர் )21.11.1979) 

22.11.1979-(திருச்சி - கருர்)-(கோவை - சென்னை) 23.11.1979 என்று நான்கு கட்டங்களாக புகைவண்டி சுற்றுபயணம் மூலம் ரயில் நிலையங்களில் 23.11 1979 வரை பரப்புரை செய்தார். 

26.11.79 சென்னை அண்ணாசாலை பெரியார் சிலை அருகே தீபந்தம் ஏந்தி வந்து  நகலுக்குத் தீ வைத்தார். 

1980 ஜனவரி நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகம் முழுவதும் ஆசிரியர் பரப்புரை செய்ததன் விளைவு அஇஅதிமுக  பெருத்த தோல்வி அடைந்தது. 

21.01.80 அனைத்து கட்சி கூட்டத்தில் ஆசிரியர் உரை.

ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணை ரத்து செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31% இருந்த இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

25.01.80 முதல்வருக்கு ஆசிரியர் நன்றி கடிதம்.

10.02.1980 இருந்து 17.2.1980 வரை நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தினார்.

வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமுக நீதி கொள்கை அப்போது பளிங்கு சமாதிக்கு போயிருக்கும் என்று சிங்கப்பூர் தமிழ்முரசு நாளேடு எழுதியது.

மண்டல் குழு அறிக்கை

மண்டல் குழு  பரிந்துரையை அமல்படுத்தக் கோரி 01.03.1981 முதல் 15.03.1981 வரை நாடு முழுவதும் பிற்படுத்த பட்டோர் தாழ்த்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடுகளை நடத்தினார்.

69 % இட ஒதுக்கீடு :

 02.08.1994 முதல் 13.08.1994 வரை இரண்டாம் கட்ட சமூகநீதி எழுச்சி பயணத்தை  2500 கி.மீ பயணம் செய்து 70 ஊர்களில் உரை நிகழ்த்தி இருக்கிறார். 

பூரி சங்கராச்சாரியாரின் கொடும்பாவி எரிப்பு

3.11.1988 காட்பாடியிலிருந்து - கோவை 

4.11.1988 ஈ.ரோடு - திருச்சி 

5.11.1988 தஞ்சாவூர் - நாகூர் 

07. 11. 1988 மயிலாடுதுறை - சென்னை வரை புகை வண்டி சுற்றுபயணம் செய்தார்.

08.11.1988 சென்னையில் பூரி சங்கராச்சாரி கொடும் பாவியை எரித்தார்.

ஜாதி ஒழிப்பு பிரச்சாரப் பெரும் பயணம்;

 12.12.1998 முதல் 19.12.1998 வரை (வைக்கம்-மதுரை வரை)

 1313 கி.மீ பயணம், 48 இடங்களில் சொற்பொழிவு 

 *20.03.1999 முதல் 29.03.1999 வரை (திருத்தனி-திருச்சி வரை) 59 இடங்களில் சொற்பொழிவு.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை

06.2.2005 தொடங்கி 30.04.2005 வரை ஆறு கட்ட பிரச்சார பெரும்பயணம் நடைபெற்றது இதில் 160 இடங்களில் சொற்பொழிவு.

13.2.2005 - சென்னை

23.3.2005 - மன்னார்குடி

12.3.2005 -சேலம்

4.4.2005- குன்னூர்

18.4.2005- ஆத்தூர்

30.4.2005 - காரைக்காலில் முடிந்தது.

மத எதிர்ப்பு பெரும் பயணம் :
“மதவெறி மாய்ப்போம் மனிதநேயம் காப்போம்“ 
வட்டார மாநாடுகள் - தொடர் பயணம்

முதற்கட்டம் : 

1993 ஜனவரி 03 - நாகர்கோவில்

04.01.1993 - தூத்துக்குடி

05.01.1993 - திருநெல்வேலி

06.01.1993 - இராசபாளையம்

07.01.1993 - போடிநாயக்கனூர்

08.01.1993 - மதுரை

இரண்டாம் கட்டம் :

26.01.1993 - கரூர்

27.01.1993 -திண்டுக்கல்

28.01.1993-இராமநாதபுரம்

29.01.1993- காரைக்குடி

30.01.1993- புதுக்கோட்டை

மூன்றாம் கட்டம் :

21.02.1993-திருச்சி

22.02.1993-அரியலூர்

23.02.1993-விருத்தாசலம்

24.02.1993- திருக்கோவிலூர்

25.02.1993-திருவண்ணாமலை

நான்காம் கட்டம் :

12.03.1993-குன்னூர்

13.03.1993-கோவை

14.03.1993-ராதாபுரம்

15.03.1993-ஓமலூர்

16.03.1993-கிருஷ்ணகிரி

அய்ந்தாம் கட்டம் :

24.03.1993-ஆம்பூர்

25.03.1993-செங்கற்பட்டு

26.03.1993-தாம்பரம்

27.03.1993-ஆவடி

03.01.1993 முதல் 27.03.1993 வரை 25 வட்டார மாநாடுகளில் “மதவெறி மாய்த்து - மனித நேயம் மலர உரையாற்றினார்

மதவாத கண்டன மாநாடு :

01.06.1999 முதல் 06.08.1999 வரை 67 நாட்களில் 33 மாநாடுகளை நடத்தினார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் :

17.2.2004-நாச்சியார்கோவில், நன்னிலம், திருமால், நாகை

18.02.2004-கும்பகோணம், திண்டிவனம், குற்றாலம், மயிலாடுதுறை

19.02.2004-நீடாமங்கலம், கொடாச்சேரி, திருவாரூர்

20.02.2004-கரந்தை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருச்சி.

- தொடரும்


No comments:

Post a Comment