சீனாவில் தொற்றுப் பரவல் இந்தியாவில் உற்பத்தி பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

சீனாவில் தொற்றுப் பரவல் இந்தியாவில் உற்பத்தி பாதிப்பு

புதுடில்லி, மார்ச் 22 - சீனாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியாவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஏப்ரல் மாதத்தில் உற்பத்தியை குறைத்துக் கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா மற்றும் ஹாங்காங் ஆகியவற்றில் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, பல இடங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் தொழில்நுட்ப தலைநகர் என கருதப்படும் ஷென்சென் நகரத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களுக்கு தேவைப்படும் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இத்துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், தங்களுடைய உற்பத்தியை ஏப்ரலில் குறைத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாகனத் துறையை சேர்ந்த நிறுவனங்களும், சீனாவிலிருந்து பெருமளவிலான பாகங்களை இறக்குமதி செய்து வருகின்றன.ஏற்கெனவே சரக்கு வந்து சேர்வதற்கு 10 - 15 நாட்கள் தாமதமாகி உள்ள நிலையில், தற்போதைய தடைகள் காரணமாக, தாமதமாகக்கூடும் என்றும், விலையும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment