மருத்துவ குணமுள்ள பப்பாளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 14, 2022

மருத்துவ குணமுள்ள பப்பாளி

உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச் சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளிப்பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையைத் 

தரும். 

பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

* இதில் விட்டமின் சி, கி, ணி சத்துக்கள் நிறைந்திருப்பதால் கண்களுக்கு நல்லது.

* அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.

* பப்பாளிக்காயை குழம்பாக செய்து சாப்பிட்டால், பிரசவித்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்கும்.

* பப்பாளிப்பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

* பப்பாளிக்காயை கூட்டாக செய்து உண்டுவர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

* பப்பாளிப்பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.

* பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

* பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதால், ரத்தத்தில் உள்ள விஷக்கிருமிகளால் ஏற்படும் நோயினை தடுக்கலாம்.

* விட்டமின் குறைபாடு காரண மாகத்தான் எலும்பு முறிவு பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துக்களும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது.

* நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவு குறைவு.

* அஜீரணக் கோளாறு சரி செய்யப்படும் என்சைம்கள் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். மலச்சிக்கல் பிரச்சினையும் வராது.

No comments:

Post a Comment