14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29-இல் வேலைநிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 26, 2022

14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29-இல் வேலைநிறுத்தம்

ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 26- புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள் ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29-இல் நாடுதழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சம்மேளன பொதுச்செயலர் எம்.துரைபாண் டியன் சென்னையில்   செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

ஒன்றிய அரசு, லாபம் ஈட்டும் எல்அய்சி நிறுவனம், இழப்பு ஏற்பட்டஏர் இந்தியா நிறுவனம் ஆகியவற்றை விற்கிறது. அஞ்சல் துறை, ரயில்வே, பாதுகாப்பு துறைகளை கார்ப்பரேட்டுகளி டம் கொடுக்கவும், சிறிய துறை களை மூடவும்முடிவு செய்துள் ளது. ஒன்றிய அரசு அலுவல கங்களில் 8 லட்சத்து 75ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. தொழிலாளர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர் சட்டங் களை 4 தொழிற்சங்க ஆணை களாக ஒன்றிய அரசு மாற்றியுள் ளது. 

எனவே, புதிய ஓய்வூதியத் திட் டத்தை திரும்பப் பெற வேண்டும், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 18 மாத பஞ்சப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம்வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களின்அகில இந்திய அமைப்புகள், இன்சூ ரன்ஸ், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, வரும் 28, 29-ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இந்த வேலைநிறுத்தத்தில் நாடுமுழுவதும் 25 கோடி பேர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட் டில் 50 லட்சம் பேர் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment