ரயில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்த சவுதி பெண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 22, 2022

ரயில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்த சவுதி பெண்கள்

சவுதி அரேபியாவில் 30 பெண் ரயில் ஓட்டுநர் பணிகளுக்கு 28,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக அங்குள்ள ரயில் நிறுவனம் தெரிவித் துள்ளது.

தகுதி பெற்றவர்கள் ஓராண்டுப் பயிற்சிக்குப் பிறகு, புனித நகரங்களான மக்கா, மதீனா இடையே அதிவேக ரயில்களை இயக்குவார் என்று நிறுவனம் தெரிவித்தது. 

உலகில் மிகக் குறைந்த பெண் ஊழியர்களைக் கொண்ட நாடு சவுதி அரேபியா. தற்போதைய பட்டத்து இளவரசர் முகமது சல்மான், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

எண்ணெய் சார்ந்த பொருளியலைப் பன்முகப்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை அகற்றியது, அவர்களுக்கான ஆண்-பாதுகாப்பாளர் சட்டங்களைத் தளர்த்தியது உட்பட பல சமூகச் சீர்திருத்தங்கள், திட்டத்தின் வழி கொண்டுவரப்பட்டன.  இத்தகைய மாற்றங்களின் விளைவாக, தொழிலாளர் அணியில் பெண்களின் விகிதம் கடந்த அய்ந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளது. தற்போது அது 33 விழுக்காடாக உள்ளது.

சமூகச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும், சவுதிப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள, சில சுகா தாரப் பராமரிப்புகளைப் பெற இன்னமும் தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஆணின் ஒப்புதலைப் பெறவேண்டியுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment