என்னைப் பார்க்கின்றபொழுது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அதேபோன்று - உங்களையெல்லாம் சந்திக்கும்பொழுது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 24, 2022

என்னைப் பார்க்கின்றபொழுது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அதேபோன்று - உங்களையெல்லாம் சந்திக்கும்பொழுது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

தஞ்சை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியுரை

தஞ்சை, பிப்.24   உங்களையெல்லாம் இன்று சந்திக் கின்ற நேரத்தில், என்னைப் பார்க்கின்றபொழுது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ - அதேபோன்று உங்களையெல்லாம் சந்திக்கும் பொழுது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால், இதுதான் எனக்கு சரியான மருந்தும் கூட  என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல்

கடந்த 17.2.2022 அன்று முற்பகல் தஞ்சாவூர் வி.எஸ்.மகாலில் நடைபெற்ற தஞ்சை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, செயல்குமார் என்று நம்மால் பாராட்டப் படக்கூடிய அருமைத் தோழர் இரா.ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களே, மாவட்டத் தலைவர் மானமிகு வழக்குரைஞர் அருமைத் தோழர்

சி.அமர்சிங் அவர்களே, தஞ்சை மண்டலத் தலைவர் தோழர் அய்யனார் அவர்களே, மண்டல செயலாளர் தோழர் முனுசாமி அவர்களே,

மாவட்டச் செயலாளர் மற்றும் பல்வேறு பொறுப்பு களில் இருக்கக்கூடிய நண்பர்களே,

குடந்தை மாவட்டம், பட்டுக்கோட்டை மாவட்டம், மன்னார்குடி மாவட்டம் என்று பழைய தஞ்சை மாவட்டமாக இருந்ததை நிர்வாக வசதிக்காக பல் வேறு மாவட்டங்களாகப் பிரிந்திருக்கக்கூடிய வகை யில், அந்தந்த மாவட்டத் தலைவர்களே, நேரத்தின் நெருக்கடி காரணமாக ஒவ்வொருவரையும் தனித் தனியே அழைத்ததாக  அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிக் கொள்ளவேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

மகளிரணி தோழராக இருக்கக்கூடிய கலைச் செல்வி,  அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி உள்பட அனைத்து மகளிர் தோழர்களே,

மாணவர் கழக அமைப்பாளர் செந்தில் உள்பட ஏனைய தோழர்களே,

பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய அருமை நண்பர்களே,

கழகக் காப்பாளர் அருமை நண்பர் மாத்தூர் ஜெயராமன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடிய அருமைத் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகிழ்ச்சி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

என்னுடைய உடல்நிலையைப்பற்றி இங்கே சொன்னீர்கள். இந்த நேரத்தில், எல்லோருக்கும் இந்தத் தொந்தரவு ஏற்படுவது இயல்பு. ஆகவே, இன்னமும் கரோனா தொற்று முடியவில்லை - அதனால் முகக்கவசம், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுவது, தனிநபர் இடைவெளி, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், உணவில் கட்டுப்பாடாக இருப்பது, பொதுவாக நடைபெறும் தவிர்க்கவேண்டிய நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது - இவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்று உங்களை அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனக்கு இரண்டாவது முறை கரோனா தொற்று ஏற்பட்டது என்று கவலையோடு சொன்னார்கள். நான் அப்பொழுதுகூட பெரிய அளவில் பயப்பட வில்லை. எல்லா இடங்களிலும் அந்தத் தாக்குதல் இருந்தது என்றாலும்கூட, மற்றவர்களுக்கெல்லாம் பரவும் என்பதினால், தனியாக இருக்கவேண்டும் என்பதினால், என்னால் வீட்டில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு வந்துவிடக் கூடாது என்பதற்காக, மருத்துவமனையில் சில நாள்கள் சிகிச்சை பெற்று வந்தேன்.

முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து கடுமையான உழைப்பு!

நம்முடைய அரசு இப்பொழுது வந்திருக் கிறது. இந்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகளை செய்திருக்கிறார்கள். கரோனா நோயைக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக, முதல மைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து கடுமையாக முயற்சியை மேற் கொண்டார்.

இன்றுவரையில் மிகப்பெரிய சங்கடங்கள் ஏற்பட்ட சூழ்நிலையில், அதனை எதிர்கொண்டு சமாளித்து, ஏராளமானோருக்குத் தடுப்பூசி போடுவது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கான வழிவகைகளை செய்தார்கள்.

அதேபோன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சரின் துடிப்புமிகு செயல்பாடுகள் சிறப்பானதாக இருக்கின்றன.

முதல் முறை கரோனா தொற்று ஏற்பட்டதும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

இரண்டாவது முறை எனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதும், சென்னை கிண்டியிலுள்ள கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தேன்.

தனியார் மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் இருக்குமோ - அதே வசதிகள் அரசு மருத்துவமனையிலும்!

தனியார் மருத்துவமனையில் என்னென்ன வசதி கள் இருக்கின்றனவோ அவை கொஞ்சம்கூட குறை யாத அளவிற்கு கிங்ஸ் மருத்துவமனையிலும் இருந்தன - எனக்கு மட்டுமல்ல, எல்லா நோயாளி களுக்கும். அதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மற்றவர்கள் சொல்லி தெரிந்துகொள்வதைவிட, நமக்கு ஏற்பட்ட அனுபவத்தின்மூலம் தெரிந்து கொண்டதன்படி, கரோனா தொற்றை வெல்வது மட்டுமல்ல - இந்த ஆட்சி  உண்மையிலேயே எப்படி நடைபெறுகிறது - சாதனைகள் என்பது வெறும் ஏட் டளவிலோ, பேச்சளவிலோ இல்லாமல், செயலளவில் இருக்கின்றன என்பதை நேரில் பார்க்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றேன்.

எனக்கு ஏற்பட்ட ஒரு நல்ல அனுபவம். பகுத்தறிவுவாதிகள் எந்த இடர்ப்பாட்டையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் அவர் களுடைய அடையாளமாகும்.

அந்த வகையில், அதை ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்திக் கொண்டேன்.

இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல் கிறேன்.

அத்திவெட்டி என்றாலே, எதற்குப் பெயர் பெற்றது என்று  உங்களுக்கெல்லாம் தெரியும்

பட்டுக்கோட்டையில் 25 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி, நம்முடைய கழகக் கட்டடத்தை சட்டப்பூர்வமாக வென்றோம். நம்முடைய வீரைய் யன் போன்ற கழகத் தோழர்கள் அத்திவெட்டிக் காரர்கள். அத்திவெட்டி என்றாலே, எதற்குப் பெயர் பெற்றது என்று  உங்களுக்கெல்லாம் தெரியும். நம் முடைய இயக்கத் தோழர்களாக வந்தவுடன், அவர் கள் எல்லாம் மென்மையானவர்களாக ஆகிவிட் டார்கள்.

பட்டுக்கோட்டை கழகக் கட்டடத்திற்காக 25 ஆண்டுகள் வழக்கு நடத்தவேண்டியிருந்தது. நாம் சட்டத்தை மீறாதவர்கள் - எந்த அரசாக இருந்தாலும். சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, அதைத்தான் நாம் செய்வோம்.

குறுக்கு வழி - சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழி நமக்கு வேண்டாம்!

பல பேர் சொன்னார்கள், ஏங்க, இதற்காகவே சிலர் இருக்கிறார்கள்; அவர்களை வைத்து  பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்று சொன்னார்கள்.

வேண்டாம், அந்த குறுக்கு வழி நமக்கு வேண்டாம்; சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழி நமக்கு வேண்டாம். சட்டப்பூர்வமாக எப்பொழுது முடிவு வருகிறதோ, அது வரட்டும். ஏனென்றால், அது அறக்கட்டளை சொத்து - பெரியாருடைய சொத்து. நிச்சயமாக அந்த வாய்ப்பு சட்டப்பூர்வமாக நமக்குக் கிடைக்கும் என்றேன்.

நான் கரோனா தொற்று சிகிச்சைக்காக கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூட் மருத்துவமனையில் இருந்த பொழுது,  பட்டுக்கோட்டை கழகக் கட்டடம் சம்பந்த மாக சட்டப்பூர்வமாக நடைபெற்ற வழக்கில் வெற்றி பெற்றோம் என்ற தகவல் வந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக அந்தக் கட்ட டத்தை இடிக்கவேண்டும் என்று முனிசிபாலிட்டி யிலிருந்து கடிதம் கொடுத்திருந்தார்கள்.

தோழர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி கிட்டியது!

உடனடியாக அதை செய்யவேண்டும் என்று நம்முடைய தோழர்களான ஜெயக்குமார், அமர்சிங், ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் போன்ற தோழர்களிடம் சொன்னபொழுது, அத்துணை தோழர்களும் ஒன் றாகச் சேர்ந்து அதை செயல்படுத்தினார்கள். இதுதான் நம்முடைய இயக்கம்.

மருத்துவர்கள் என்னிடம் கேட்டார்கள், ''என் னங்க, மருத்துவமனையில் இருந்துகொண்டே கழகப் பணிகளைப் பார்க்கிறீர்களே'' என்று.

மருத்துவமனையிலிருந்தே 'விடுதலை'க்கு அறிக்கைகளை எழுதினேன்!

''ஆமாங்க, இயக்கப் பணி - எங்கள் பணி என்பது - குடிசெய்வார்க்கில்லை பருவம் போன்றது. கரோனா தொற்று ஏற்பட்டதினால், தனியாக இங்கே இருக் கிறேன். அதற்காக சுருண்டுப் படுத்துக் கொண்டு இருக்கவேண்டும் என்பதல்ல''  என்று சொல்லி, மருத்துவமனையில் இருந்துகொண்டே அறிக்கை களை விடுதலைக்கு எழுதி அனுப்பினேன்.

ஆகவே, பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் வாழ்ந்த மண். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் படித்து வளர்ந்த மண். ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் போன்றவர்கள் - நமக்கு மிகப்பெரிய அறிவுரையாளர் களாக இருந்தவர்களை எல்லாம் தந்த மண் அது.

இன்றைக்கும் அதை நம்முடைய தோழர்கள் கட்டிக் காப்பாற்றுகிறார்கள். ஆகவே, எனக்கு மிக்க மகிழ்ச்சி!

உங்களையெல்லாம் சந்திக்கும்பொழுது

எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

உங்களையெல்லாம் இன்று சந்திக்கின்ற நேரத்தில், என்னைப் பார்க்கின்றபொழுது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ - அதேபோன்று உங்களையெல்லாம் சந் திக்கும்பொழுது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால், இதுதான் எனக்கு சரியான மருந்தும் கூட!

நகராட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது - சற்று நேரத்திற்கு முன்புகூட செய்தியாளர்கள் கூட்டத்தில் நான் சொன்னேன். 19 ஆம் தேதிக்குப் பிறகு, மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் முடிந்த முடிவு வரும்பொழுது - எப்படி நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, சட்டப்பேரவைத்  தேர்தலிலும் சரி, அதற்கடுத்து நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலிலும் எப்படி திராவிட  முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்றதோ, அதேபோன்றுதான் நடைபெறவிருக்கின்ற தேர்தலிலும் மிகப்பெரும் அளவிற்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

அந்த வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது. தோல்வி பயத்தினால், ஜன்னி வந்து உளறுவதுபோன்று எதிர்க்கட்சியினர் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒன்றும் அறிவுப்பூர்வமான அணுகுமுறை அல்ல.

அப்படி இல்லையென்றால், அமாவாசையை குறிப்பிட்டுச் சொல்லுவாரா மேனாள் முதலமைச்சர் - 27 அமாவாசை என்கிறார். சொல்வதுதான் சொன்னாரே, பவுர்ணமியையாவது சொல்லியிருக்க வேண்டாமா?

இருட்டு ஆட்சியில், அமாவாசைக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்!

அமாவாசைக்குத்தான் அவர்கள் மிகவும் முக் கியத்துவம் கொடுக்கிறவர்கள். ஏனென்றால், ஆட் சியை இருட்டாக்கி, இருட்டு ஆட்சியில், அமாவா சைக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

உதயசூரியன் ஆட்சி என்றால், ஒளிவீசக் கூடிய ஆட்சியாகும்.

தேர்தல் பிரச்சாரத்திற்காகவும், உங்களையெல் லாம் சந்திக்கவேண்டும் என்றும்தான் இங்கே வந்திருக்கிறேன்.

எந்தத் தேர்தலாக இருந்தாலும், கரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தது என்று சொன்ன காலத் திலும்கூட, தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்குப் போகாமல் இருந்ததில்லை நான் என்பது உங் களுக்கெல்லாம் தெரியும்.

தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நாள் மாலை 5 மணி என்றால், தஞ்சை மணிக்கூண்டு அருகில் திராவிடர் கழகம்தான் கூட்டம் நடத்தும் என்கிற அளவிற்கு இதுவரையில் நாம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியிருக்கிறோம்.

அந்த வாய்ப்பை ஏன் இந்தத் தேர்தலில் நாம் நிறுத்தவேண்டும் என்று நினைத்தேன்.

மக்களைப் பார்க்கும் வாய்ப்புதான் மிக முக்கியமானது!

ஆனால், தோழர்கள் என் உடல்நிலையைக் கருதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வேண்டாம் என்றார்கள்.

முதலமைச்சர் அவர்களேகூட, உங்களுடைய உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்.

ஆனால், எனக்கு உடல்நிலையைப் பார்த்துக் கொள்வதற்கு என்ன தேவை என்றால், மக்களைப் பார்க்கும் அந்த வாய்ப்புதான் மிக முக்கியமானது.

அந்த அடிப்படையில் பார்க்கின்றபொழுது, இன்றைக்கு மாலை தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. நானே சொன்னேன், தேர்தல் பிரச்சாரத்தை வழமையாக முடித்து வைப்பதுபோன்று, 51 வேட்பாளர்களை ஆதரிப்பது மட்டுமல்ல, அந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுவது, எல்லா இடங்களுக்கும் போகும்.

தாய்க்கழகத்திற்கு மிகப்பெரிய பொறுப்பு உண்டு

ஆகவே, தமிழ்நாட்டில், திராவிடர் கழகத் தினுடைய நோக்கம், அடிப்படை பிரச்சாரம் என்பது மிக முக்கியமானது - திராவிடர் கழ கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி. தாய்க்கழகத்திற்கு மிகப்பெரிய பொறுப்பு உண்டு.

சிலர் புரியாமல் சொன்னார்கள், கலைஞர் அவர்கள் மறைவிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று. அதுதான் சில பேருடைய ஆசையும்கூட - ஏனென்றால், குறுக்கு வழியில் அங்கே போய் உட்கார்ந்து விடலாமா என்று.

அப்பொழுது திராவிடர் கழகம்தான் - தாய்க் கழகம்தான் தெளிவாக சொல்லிற்று - நாம் அப்படி சொன்னபொழுதுகூட, ஏதோ இவர் சாதாரணமாக சொல்கிறார் என்று நினைத் தார்கள் பிறகுதான் அது உண்மை என்பது இன் றைக்கு அவர்களுக்குத் தெளிவாகியிருக்கும்.

தமிழ்நாடு கற்றிடத்திற்கு வந்திருக்கிறது

எப்பொழுதும் பெரியாரும், பெரியார் தொண்டர் களும் சொல்வது என்பது - காலத்திற்கு முற்பட்டதாக இருக்கும். ஆனால், அது காலத்தை வென்றதாக இருக்கும்.

அந்த அடிப்படையில்தான் நாம் சொன்னோம், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருப்பது வெற்றிடம் அல்ல. தமிழ்நாடு இனிமேல்தான் கற்றிடத்திற்கு வந்திருக் கிறது.

மு..ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில், முதலமைச்சருடைய தலைமையில் அமையவிருக் கின்ற ஆட்சி கற்றிடமாக இருக்கும் என்றோம்.

அதேபோன்று இன்றைக்கு என்ன செய்கிறார்கள் - இந்தியா முழுவதும் இருக்கின்ற எல்லா மாநில முதலமைச்சர்களும் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிறார்கள். எனவே, தமிழ்நாடு கற்றிடம்.

முதலமைச்சர் அவர்களும், சமூகநீதி மண் இந்த மண் என்பதைக் காட்டியிருக்கிறார்.

எனவே, சமூகநீதியைப் பொறுத்தவரையில், தமிழ்நாடுதான் ஒரு வழிகாட்டி .

உத்தரப்பிரதேசமாக ஆனாலும், வடக்கே இருக் கின்றவர்களானாலும், கிழக்கே இருக்கின்றவர் களானாலும், மேற்கே இருக்கின்றவர்களானாலும், இந்தியாவிலே எந்தத் திசையை எடுத்துக் கொண் டாலும் தமிழ்நாட்டை உற்றுப்பார்க்கிறார்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment