ரஷ்யாவின் 4 மிகப்பெரிய வங்கிகள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

ரஷ்யாவின் 4 மிகப்பெரிய வங்கிகள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

நியூயார்க், பிப். 26- உக்ரைனை தாக்கி வரும் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. ரஷ்யா ராணுவ வங்கி உள்ளிட்ட 2 முக்கிய வங்கிகள் மற்றும் நிதி பரிவர்த்தனை மீது தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்தார். இந்த நிலையில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள் ளது. இது குறித்து அதிபர் ஜோபை டன் கூறியதாவது:-

ரஷ்யாவின் 4 மிகப்பெரிய வங் கிகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. பொருளாதார தடை விதித்ததற்காக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ரஷ்யாவுக்கு உதவி வரும் பெலா ரஸ் நாடு மீதும் கடுமையான பொரு ளாதார தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் வெள்ளை மாளிகை யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடை காரணமாக உலக நிதி அமைப்பில் இருந்து ரஷ்யா தனித்து விடப்படும்” என்று தெரிவித்தார்.

ரஷ்யா மீது அய்ரோப்பிய ஒன்றியமும் தடை விதித்துள்ளது. அய்ரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. ரஷ்ய வங்கிகள் மற் றும் முக்கிய துறைகள், நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஜப்பானும் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை களை விதித்தது. ரஷ்ய நிறுவனங் கள், சொத்துக்கள் முடக்கப்படுவ தாக தெரிவித்தது.

No comments:

Post a Comment