அலங்கார ஊர்தி புறக்கணிப்பு! சென்னை, மதுரை, கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

அலங்கார ஊர்தி புறக்கணிப்பு! சென்னை, மதுரை, கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் அறிக்கை!

சென்னை, ஜன.24- திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நேற்று (23.01.2022) ஞாயிறு காலை 11 மணிக்கு, இணைய வழியில் நடை பெற்றது.

அக்கூட்டத்தில், வரும் குடியரசு நாளன்று (ஜனவரி 26) டில்லியில் நடைபெறவி ருக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில், தமிழ்நாட்டு ஊர்தி புறக்கணிக்கப்பட்ட தைக் கண்டித்தும், அந்த ஊர்தியினைச் சென்னைக் குடியரசு நாள் அணி வகுப் பிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் உலாவரச் செய்வதென்று முடிவெடுத் துள்ள தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களையும் பாராட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நம் ஊர்தி புறக்கணிக் கப்பட்டது என்பது தமிழர் களையே புறக்கணித்ததாக ஆகும் என்று பேரவை கருதுகின்றது.

எனவே, குடியரசு நாளான ஜனவரி 26ஆம் நாள் காலை 10 மணிக்கு, தனி மனித இடைவெளியோடும், முகக் கவசங்களோடும், அறவழியில், சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாநகரங்களில், பேரவையின் அலுவலக வாயில்களில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு தனித்துவமானதும், தன்னிகரற்றதும் ஆகும்! அதனை மறுக்கவோ, மறைக் கவோ யார் முயன்றாலும் அதனைத் தன்மானமிக்க தமி ழர்கள் யாரும் ஏற்க மாட் டார்கள்!

வாருங்கள்.... கொடி பிடிப் போம், அணிவகுப்போம், முந்து தமிழ் உணர்வை முழக்கமிட்டு எடுத்துரைப் போம்

என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டி யன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.    

No comments:

Post a Comment