மோடியின் ஆட்சியில் சீரழிந்து கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

மோடியின் ஆட்சியில் சீரழிந்து கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகம்

கிறிஸ்தொபர்  ஜேஃபர்லாட்

(பிரெஞ்ச் நாட்டு  அரசியல் அறிவியலாளரான கிறிஸ்தொபர்  ஜேஃபர்லாட் இந்திய அரசியலைப் பற்றி,  1990 களின் துவக்கம் முதல் அடித்த ஒவ் வொரு அரசியல் பேரலையின் போதும் நிகழ்ந்த வற்றை எல்லாம் படம் பிடித்து  எழுதி வந்திருக் கிறார். கடந்த 30 ஆண்டு காலத்தில், இந்தி யாவின்அனைத்து முக்கியமான அரசியல் கோட் பாடுகள் பற்றியும்,  30 நூல்கள்,  குறுநூல்கள் (மோனோகிராஃப்கள்), தொகுக்கப்பட்ட நூல்களை பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி யுள்ளார். ஹிந்து தேசியத்தின் எழுச்சி, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடையே வெடித்தெழுந்த ஜாதி அரசியல், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் மண்டல் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் வளர்ந்து வரும் ஒரு ஆர்வம், சிறுபான்மை மத மக்களின், குறிப்பாக முஸ்லிம்களின்  சீரழிந்து கொண்டிருக்கும் நிலை, பாகிஸ்தான் நாடு பின்பற்றி வந்த கொள்கைகள், நீண்ட கால இந்தியா - பாகிஸ் தான் பகை உணர்வும் போர்களும், பொருளாதார மயமாக்கல் மற்றும் உலக மயமாக் கப்பட்டதனால் பெருகியுள்ள இந்திய மத்தியதர மக்களின் எண்ணிக்கை, சந்தை சீர்திருத்தங் களுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும் இந்திய வர்த்தகம், தன் தோற்றக் களமான குஜராத்,  உத்தரப்பிரதேசம், மகாராட்டிர மாநிலங்களில் இருந்து ஹிந்துத்துவக் கோட்பாடு நாடு முழுவதும் பரவியுள்ள தால் சங்பரிவாரம் பெற்று வரும் துணிவு  ஆகிய அனைத்தைப் பற்றியும் அவர் எழுதியிருக்கிறார்).

அயோத்தியாவில் இருந்து அகமதாபாத் வரை,  பம்பாய் முதல் பனாரஸ் வரை, நாக்பூர் முதல் டில்லி வரை,  லக்னோவில் இருந்து பெங்களூர் வரை,  நாகாலாந்து மலைகளில் இருந்து நக்சல்பாரிகளின் காடுகள் வரை, லாகூரில் இருந்து கராச்சி வரை, இந்த உபகண்டத்தில் எந்த ஒரு முக்கியமான அரசியல், மதம் அல்லது ஜாதி  ஆகியவை பற்றிய நிகழ்ச்சி ஏதேனும்  ஒன்று நடந்திருந்தாலும் சரி  அதனைப் பற்றி கால வரிசைப்பட ஜெஃபர்லாட் நிச்சயமாக ஆய்வு செய்தி ருப்பார். எனவே, நரேந்திர மோடியின் செல்வாக்கினால் இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள  மாபெரும் மாற்றத் தைப் பற்றி அவரது இந்த நூல் ஒருங்கிணைந்த ஒரு கண்ணோட்டத்தைப் பெறுவது தவிர்க்க இயலாததாகும். கோவிட்-19 நோய்த் தொற்று மட்டுமல்லாமல்,  மோடியின் இந்தியா உரத்த குரலில் தெளிவாகத்  தெரிவிக்கும் செய்தி இதுதான்: இந்தியா மாறிவிட்டது;  அதுவும் பழைய நிலைக்குத் திரும்ப இயலாதபடி மாறிவிட்டது. தாராளமயக் கொள்கை கொண்ட மதச் சார்பற்ற ஜனநாயக நாடாக பத்தாண் டுகளுக்கு முன்னர் இருந்த இந்தியா இன்று பெரும்பான்மை மதத்தினரின் இன தேசிய நாடாக மாறிவிட்டது.

லட்சியங்கள் மீது விழுந்த பேரடிகள்

பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக  2013-ஆம் ஆண்டு இறுதியில் மோடி அறிவித்தது முதற் கொண்டு, இந்திய ஜனநாயகத்தின் அடித்தளக் கோட்பாடுகள் மீது தொடர்ந்து பேரடிகள் விழுந்து கொண்டிருப்பதை ஜேஃபர்லாட் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்திருக்கிறார். முஸ்லிம்களும், தாழ்த்தப் பட்டவர்களும் வெட்டிக் கொல்லப்படுவதையும், பகுத்தறிவு நுண்ணறிவாளர்கள் கொல்லப்படு வதையும், தூண்டில் போட்டு கல்வியாளர்கள் பிடிக்கப்படுவதையும், தன்னார்வத் தொண்டு ஆர்வலர்கள் சிறைகளில் அடைக்கப்படுவதையும்,  திரைக் கலைஞர்கள்  துன்பு றுத்தப்படுவதையும்,  ஊடகங்கள், பல்கலைக் கழகங்கள், நீதிமன்றங்கள்  பலமிழக்கச் செய்யப்படுவதையும்,  எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்சி மாறவைத்து அக் கட்சிகளை பலமற்றதாக ஆக்குவதையும், நாட்டின் பொருளா தாரம் சிதைக்கப்படுவதையும், சிறுபான் மையின மக்கள் துன்புறுத்தப் படுவதையும், அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டும், பொதுத் துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருப் பதையும், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங் களை தாக்கிக் கொண்டு இருப்பதையும், குடிமக்களை எதிர்த்துப் பேச விடாமல் ஊமைகளாக்கிக் கொண்டிருப் பதையும், வரலாற்றைத் திரித்துக் கூறிக் கொண்டிருப் பதையும், வெறுப்புப் பேச்சு, பொய்ச் செய்தி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றின்  மூலம் ஊடகங்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு இருப்பதையும், ஆளுங் கட்சியினால் நாடாளுமன்ற நடை முறை மீறப்படு வதையும்,  அவமதிக்கப்படுவதையும்,  மாற்றுக் கருத்து கொண்டோரைக் கொடியவர்களாக எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பதையும், காவிப் படையினர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, சிறுபான்மை மத மக்களை கண்காணித்துக் கொண்டு வருவதையும், காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மாறுபட்டதாகச் செய்து வருவதையும், அரசமைப்பு சட்டத்தை  நொறுக்கிக் கொண்டிருப்பதையும்,  உண் மையைப் புறக்கணித்து பொய்பேசித் திரிவதையும் பார்த்துக் கொண்டு வாழும் நம்மைப் போன்றவர்களால், இத்தகைய கொடிய செயல்களைப் பற்றி விவரித்து எழுதுவதற்கு 700 பக்கங்கள் ஏன் தேவைப்பட்டன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஒரு நிகழ்ச்சியையும் விட்டுவிடாமல் முறைப் படி அனைத்தையும் ஆவணப் படுத்தி இருப்பதுடன், இந்திய ஜனநாயகம் ஏன் வெகு விரைவில் அழிந்து போனது என்பதை நமது எதிர்கால சந்ததியினருக்கு விளக்குவதற்கு நம் காலத்து மதிப்பு மிகுந்த ஆவணமாக விளங்க இயன்றதாகவும் அது இருப்பதாகும். சம குடியுரிமை, வயது வந்தோர் அனைவருக்கும் வாக் குரிமை, கால முறைப்படி நடத்தப்படும் தேர்தல்கள், பிரதிநிதித்துவ அரசு, சிறுபான்மையின மக்கள் பாது காப்பு, சுதந் திரமான பத்திரிகைத் துறை, புகழ் பெற்ற சுயாட்சி, போன்றவற்றில் மிகமிக அதிகமான ஆர்வம் கொண்ட, ஒரு காலத்தில் உலகத்தின் மிகப் பெரிய, துடிப்பு மிகுந்த ஜனநாயக நாடாக இருந்த நம் இந்திய நாட்டுக்கு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் பிரச்சினைகள் மிகுந்து இருந்தன என்ற போதிலும்,  மோடிக்கு முன்பிருந்த ஆட்சிகள் நாட்டின் பன்முகத் தன்மைகளையும்,  கருத்து வேறுபாடுகளையும் உண்மையில் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்திருக்கின்றன.

கடந்த 7-8 ஆண்டுகளில் இந்தியாவில் என்னதான் நடந்து உள்ளது என்பதைப் பற்றிய தாராள மயமான  கருத்தொருமை மிகுந்த செய்திகளை ஜேஃபர்லாட் வெளிக் கொண்டு வந்ததுடன், இன ஜனநாயகம், கவர்ச்சிகரமான தலைமை, மக்களிடையே புகழ் பெற்ற வலிமையான தலைவர்கள், வலதுசாரி தேசியம், அரசை முறையான அமைப்பாக செயல்பட விடாமல் தடுத்தது,  தேர்தல் வெற்றிகளால் கிடைத்தது போல தோன்றும் யதேச்சதிகாரம் மெல்ல மெல்ல அரசிலும் ஆளுங் கட்சியிலும் ஊடுருவியது, சிறுபான்மை மதத்தவரை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குவதற்காக தொடர்ந்து இடைவிடாது பாடுபட்டது, புதிய வடிவிலான சண்டைகள், ஆதிக்கம், சிறுபான்மை மத மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக்கி வைத்தல்,  சகிப்புத் தன்மை,  சமத்துவம், அனைத்து மக்களையும் தேசிய நீரோட்டத்தில் கொண்டு வருவது  ஆகியவற்றை கைவிட்டுவிடுவது போன்ற இலக்கிய கோட்பாட்டு துணைக்கருவிப் பெட்டகம் என்ற மிகப் பெரிய பாண்டியத்துவம் பெற்ற இத்தகைய புள்ளி விவரங்களையும் ஜேஃபர்லாட் வெளிக் கொண்டு வந்து தந்துள்ளார்.

கோட்பாட்டு அளவிலான கைப்பற்றுதல்கள்

பெரும்பான்மை மத மக்கள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டது, கலவர அரசியல், நீதி மன்றங்களில் தங்களுக்கு ஆதரவான நீதிபதிகளை நியமித்து நிரப்புதல், குஜராத் மாநிலத்தின் போலி முதலாளித்துவம் போன்ற மோடியின் தனிப்பட்ட தன்மைகளை எடுத்துக் காட்டுவதற்கான ஆதாரங் களை மிகுந்த கவனத்துடன் நூலாசிரியர் எடுத்து வைத்து கையாண்டுள்ளார். அத்துடன் மோடியின் தளபதியான அமித்ஷாவின்  கலாச்சாரத் தோட் டத்தைப் பற்றியும், இந்தியாவின் அதிகாரம் மிகுந்த இரண்டு குடும்பங்களான அம்பானி, அதானி குடும்பங்களைப் பற்றியும் அவர் எடுத்துக் கூறுகிறார். தனது மற்றொரு நூலில் இந்திவில் 1975-1977 ஆண்டு காலத்தில் நிலவிய தேசிய நெருக்கடியைப் பற்றி ஆய்வு செய்த ஜேஃபர்லாட் இந்திரா காந்தி மற்றும் மோடியின் செயல்பாட்டுத் தன்மைகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்த விவரங்களையும்,  பொது மக்களின் கற்பனை, பத்திரிகைத் துறை, ஊடகத் துறை, காவல் துறை, அரசு நிருவாகத் துறை, நீதித்துறை மற்றும் ராணுவத் துறையிலும் கூட ஒட்டு மொத்தமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊடுருவி கோட்பாட்டு அளவில் அவற்றைக் கைப்பற்றியிருப்பதைப் பற்றியும் அவர் ஆய்வு செய்துள்ளார்.

யோகி ஆதித்தியனாத்  எவ்வாறு அரசாட்சியை மதமயமாக்குகிறார் என்பதையும்,  இஸ்லாமியர் மீது வெஞுப்பு கொண்டு தாக்குவதே அரசின் அதிகார பூர்வமான ஒரு கொள்கையாகக் கொண்டு ஒரு ராணுவ அரசைப் போன்று அரசை அவர்  எப்படி நடத்தி வருகிறார் என்பதைப் பற்றி ஜேஃபர்லாட் ஆய்வு செய்து தெரிவித்து இருக்கிறார்.  ஆதிக்கமும் சலுகைகளும் பெற்றிருக்கும் பழைமையான ஜாதி மனப்பான்மையாலும், சமூக பிற்போக்குத் தனத் தாலும் ஆணாதிக்கத்தை மீண்டும் நடைமுறைப் படுத்திக் கொண்டு, முஸ்லிம்களையும், கிறித்தவர் களையும் தொடர்ந்து அச்சுறுத்துவதற்கான செயல் திட்டங்களாக பசு பாதுகாப்பு,  லவ் ஜிஹாட்,  கர்வாப்சி ஆகிய செயல் திட்டங்கள் யோகியின் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்துடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் அரியானா போன்ற இந்தி மொழி பேசப்படும், பசு வழிபாடு மேற்கொள்ளப்படும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இச் செயல்திட்டங்கள் முழுமை பெற்று தெற்கே கர்நாடக மாநிலத்திலும், கிழக்கே அசாம் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இப் பகுதிகள் முழுவதுமாக காவி மயமாக்கப் பட்டுள்ளன.

பஞ்சாய், டில்லி, பீகார், மகாராட்டிரா, கோவா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், பல்வேறுபட்ட  குறிப்பிட்ட  பிராந்திய காரணங்களுக்காகவும், உள்ளூர் அரசியலுக்காகவும், ஜாதிக் கூட்டணிகளுக் காகவும்,  ஆணி வேர் போன்ற பிராந்தியத்தலைவர்கள், அவ்வப்போது காவிப்படைக் கொள்கைக்கு எதிராக போராடுவதன் மூலம் தங்களது எதிர்ப்பை ஓரளவுக்கு வெளிப்படுத்தி, பா..கட்சிக்கு சவால் விட்டு வந்துள் ளனர். இந்த மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் பலமாக இருந்த போதிலும், மோடிக்கு எதிரான பொது மக்கள் கருத்து  ஒன்று உருவாக்கப்பட்டு, திரட்டப் பட்டுள்ளது என்றும், தென்னிந்தியாவில் மோடிக்கும் பா..கட்சிக்கும் எதிராக  அரசியல் பொது உணர்வு இனியும் மதச்சார்பற்றதாக இருக்கும் என்றும்,  கூறமுடியாது. கடந்த நூறாண்டு காலமாக சாவர்க்கரில் இருந்து கோல்வார்கர் மற்றும் அத்வானி, வாஜ்பேயி  காலம் வரை, மோடி மற்றும் அமித் காலத்திற்கு முந்தைய காலம் வரை இந்தியாவில் நிலவிய இந்துத்துவக் கோட்பாட்டை ஆய்வு செய்த ஜேஃபர்லாட் தெரிவித்துள்ள முடிவுகள், நாம் தற் போது உணர்ந்து அனுபவித்து வரும் அரசியல் நில நடுக்கத்தின் தொடக்க கால அதிர்வுகளை முன் தேதி யிட்டு பதிவு செய்து கொள்ள நம்மை அனுமதிக் கின்றன. இஸ்ரேல், துருக்கி, ஹங்கேரி மற்றும் பிரேசில் போன்ற மேலை  நாடுகள் இனஜனநாயக எழுச்சிக்கு இடம் அளிக்கும் நாடுகளாக விளங்குகின்றன.

ஏற்கெனவே நம் மீது ஆட்சி செய்து கொண்டிருக் கும் இரண்டாவது ஜனநாயகமும், ஹிந்து ராஷ்டிராவும் குறிப்பிடத் தக்கதொரு எதிர் காலத்துக்கு நீடித்து நிலைக்கும் என்றே தோன்றுகிறது. ஆயுதப் போராட் டத்துக்கு அழைப்பு விடுக்கும் வரலாற்றுப் பாடங் களுக்கு நாம் செவி சாய்ப்போமானால், மோடியின் இந்தியா என்பது நமக்கு உடனடியாக நினைவூட்டி, பதிவு செய்யும் எச்சரிக்கை மணியாகவே இருக்கும்.

நன்றி: 'தி இந்து' 12-12-2021

தமிழில்:  ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment