கலைஞர்கள் மீது பொதுமக்கள் கவனம் வைக்க வேண்டும் மக்களவை உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

கலைஞர்கள் மீது பொதுமக்கள் கவனம் வைக்க வேண்டும் மக்களவை உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள்

சென்னை, ஜன.3 கலைஞர்கள் மீது பொதுமக்கள் கவனம் வைக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி  வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை- லயோலா கல்லூரியில், பேரிடரால் வாழ்வாதாரம் இழந்த கலைஞர்களை  பேணிக்காக்க 9ஆம் ஆண்டு வீதி விருது விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், தி.மு.. மகளிரணி செயலாளரும் கனிமொழி மக்களவை உறுப்பினருமான பங்கேற்றார். நிகழ்ச்சியில், பேசிய பேராசிரியர் ரோஸ்,  “நீங்கள் மறுபடியும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்க வேண்டும்.

 சென்னை சங்கமத்தை மீண்டும் நடத்தினால், இந்த நிகழ்ச்சிகளை நிறுத்திவிடுவோம்என்றார். அதற்கு பதிலளித்து பேசிய கனிமொழி,  இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தான்சென்னை சங்கமம்தொடங்கப்பட்டது. சென்னை சங்கமம் தொடர்ந்து நடைபெறாவிட்டாலும், அதனுடைய வெற்றி இந்த மேடையில் தான் இருக்கிறது. மேலும், கலைஞர்கள் மீது பொதுமக்கள் கவனம் வைக்க வேண்டும்என்றார்.

 

தமிழ்நாட்டில் 90 அணைகளில் நீர் மட்டம் உயர்வு

2022 வடகிழக்கு பருவமழை வரை குடிநீர் பிரச்சினை இருக்காது நீர்வளத்துறை தகவல்

சென்னை, ஜன.3 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, 93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 87.2 டி.எம்.சி.யாகவும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் 30.8 டி.எம்.சி.யாகவும், 4 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 3.79 டி.எம்.சி.யாகவும், 10.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில் 7.30 டி.எம்.சி.யாகவும், 6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 5.53 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 4.94 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 5.37 டிஎம்சியாகவும், 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 3.92 டிஎம்சியாகவும், 2.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 1.8 டிஎம்சியாகவும், 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 1.62 டிஎம்சியாகவும், 7.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 3.60 டிஎம்சியாகவும், 5.04 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில் 4.88 டிஎம்சியாகவும், 13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில் 13.17 டிஎம்சியாகவும், 3.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 3.47டிஎம்சியாகவும், 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 1.43 டிஎம்சி என மொத்தம் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 90 அணைகளின் நீர் மட்டம் 203.52 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது.

தற்போது வரை கோமுகி, மணிமுக்தா நதி, தேர்வாய்கண்டிகை, வறட்டாறு, ஆண்டியப்பனூர் ஓடை, மோர்தானா, ராஜா தோப்புக்கனார், குண்டாறு, வண்டல் ஓடை, சோத்துப்பாறை, சாஸ்தா கோயில், குல்லூர் சந்தை, வர்தமா நதி, குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், கரிய கோயில், ஆனை மடுவு ஆகிய 17 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நீரைக்கொண்டு 2022ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை வரை குடிநீர் பிரச்சினை இருக்காது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு  ஜனவரி 10ஆம் தேதி வரை விடுமுறை

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஜன.3 ஒன்று முதல் எட்டாம்  வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்காக அனைத்து பள்ளிகளுக்கும் 10ஆம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதுடன் இல்லம் தேடி கல்வி  திட்டத்துக்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இன்று (3.1.2021)  பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஒமிக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ஜனவரி 10ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் பள்ளிக் கல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் வழக்கம் போல பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றும்,  அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மழலையர், விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் ஆகியவற்றில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட அனுமதி கிடையாது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அரசின் வழிகாட்டுதலின் பேரில் நாள் ஒன்றுக்கு ஒரு வகுப்புக்கு 20 பேர் என்ற அளவில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment