புவி வெப்பத்தால் உருவாகும் சிறுநீரகக் கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

புவி வெப்பத்தால் உருவாகும் சிறுநீரகக் கல்!

புவி வெப்பமடைவதால் சுற்றுச்சூழ லுக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல காலமாக பேசுகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், மருத்துவ விஞ்ஞானிகள் புதிதாக ஒரு விஷயத்தை

கூறியிருக்கின்றனர். உஷ்ணம் அதிகமாகி, புவி வெப்பமடைவதால், சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது என்பதே அது.

உஷ்ணம் அதிகமான சுற்றுச்சூழலில் தொடர்ந்து இருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால், சிறுநீரில் உள்ள அதிகப்படியான தாதுக்கள், குறிப்பாக கால்சியம் அடர்த்தி அதிகமாகி, நாளடைவில் கற்களாக மாறுகிறது. இது, சிறுநீரக பாதையை அடைப்பதால், சிறுநீர் வெளியேறும் போது, தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.

உஷ்ணம் மிகுந்த நாட்களில் தான் இந்தப் பிரச்சினையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக, அமெரிக்காவின் தெற்கு கரோலினா, பிடடெல்பியா மாகாண மருத்துவமனை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கத்தால் பல உடல் பிரச்னைகள் ஏற்பட்டாலும், புவி வெப்பமயமாதல் உடல் ஆரோக்கியத்தில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி யாரும் பேசுவதில்லை என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கவலை.

ஆதாரம்: வாஷிங்டன் போஸ்ட்

No comments:

Post a Comment