பிரான்சில் கரோனா சான்றிதழ் கட்டாயம்; பொதுமக்கள் எதிர்ப்பு - போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

பிரான்சில் கரோனா சான்றிதழ் கட்டாயம்; பொதுமக்கள் எதிர்ப்பு - போராட்டம்

பாரீஸ், ஜன. 24-- கரோனா வைரசால் மிகவும் மோச மாக பாதிப்பை சந்தித்த அய்ரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு ஏற்கனவே கரோனா வைரசின் 3-ஆவது அலை கடுமையான பாதிப்பு களை ஏற்படுத்தி வரும் சூழலில் 4-வது அலை எந்த நேரத்திலும் உருவா கலாம் என சுகாதார நிபு ணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக கரோனா பரவலை கட் டுப்படுத்தும் நோக்கில் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையி லான அரசு நாடு முழுவ தும் கடுமையான கட்டுப் பாடுகளை அமல்படுத்தி வருகின்றது.

கரோனாவிற்கு எதி ராக தடுப்பூசி சரியான ஆயுதம் என்று உலக சுகா தார அமைப்பு வலியு றுத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தி வருகி றது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள, மக்களை பல்வேறு வழி களில் கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்த சூழலில் அரசின் கட்டுப்பாடுகள் தங்க ளின் சுதந்திரத்தை பறிப் பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இன்று முதல் 16 வயதிற்கு மேற்பட்டவர் கள் உணவகங்கள், வணிக வளாகங்கள், பார்கள், பொது போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்க ளுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்  என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.  

இந்த உத்தரவுக்கு எதி ராக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இது தொடர்பாக போராட்டக்காரர்கள் ஒருவர் கூறியதாவது, தடுப்பூசியை கட்டாயப் படுத்துவது தங்களின் சுதந்திரத்திற்கு எதிரா னது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் கரோனா தொற்று ஏற் படுகின்றது. இதனால் தடுப்பூசி போட்டு கொள் வதால் என்ன பயன். மேலும் இது போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதித்து வந்தால் தொடர் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment