பா.ஜ.க. ஆட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்ற 23 கோடி மக்கள் : கே.எஸ்.அழகிரி சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

பா.ஜ.க. ஆட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்ற 23 கோடி மக்கள் : கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை,ஜன.24- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றத்தில் நாட்டில் நிலவுகிற கடுமையான வறுமை யையும், பட்டினியையும் மூடி மறைக்கின்ற வகையில் ஒன்றிய பா... அரசு செயல்பட்டிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக இந் தியாவில் வறுமையை ஒழிப்ப தற்காக செயல்பட்டு வருகிற 'ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன்' தயாரித்த ஆய்வறிக்கையின்படி 20 கோடி இந்தியர்களுக்கு மேலாக நாள்தோறும் பசியோடு வெறும் வயிற்றுடன் உறங்குகிறார்கள் என்று கூறியதோடு, பட்டினியால் நாடு முழுவதும் நாள்தோறும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தற்போது பா... ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்றுள்ளனர்.

இதன்படி இந்திய மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவரும், உலக மக்கள் தொகையில் மூன்று சதவிகிதமும் இந்தியாவில் வறு மையில் இருப்பதாக வலுவான புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் 13 கோடி இந்தியர்களின் குறைந்தபட்ச வருமானம் ஒரு நாளைக்கு ரூபாய் 150க்கும் கீழே சென்றுள்ளது. வரலாறு காணாத வகையில் பொருளாதார பேர ழிவை மக்கள் சந்தித்து வருகி றார்கள்.

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழலே இல்லை என்று கூறு பவர்கள், அதானியின் பொருளா தார வளர்ச்சிக்கு பின்னாலே பா... அரசின் ஆதரவும், ஒத்து ழைப்பும் இல்லை என்று எவரா வது மறுக்க முடியுமா? இன்றைக்கு பா... கட்சிக்கு பின்புல ஆதர வாக செயல்படுபவர் குஜராத் மாநி லத்தைச் சேர்ந்த அதானி தான்.

எனவே, இந்தியாவை வல்ல ரசாக்குவேன், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு, இந்தியாவில் பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. மோடியின் ஆட்சியில் ஒருபக்கம் வறுமையும், வருவாய் இழப்பிலும் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். மறுபுறம் பிரதமர் மோடியின் நண்பர்களான அதானியும், அம் பானியும் போட்டி போட்டுக் கொண்டு சொத்துகளை குவித்து வருகிறார்கள். மோடியின் ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது என்ப தற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment