எரிமலை வெடிப்பால் பாதித்த டோங்கா: உதவிக்கரம் நீட்டிய நாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

எரிமலை வெடிப்பால் பாதித்த டோங்கா: உதவிக்கரம் நீட்டிய நாடுகள்

 டோங்கோ, ஜன. 22- பசிபிக் தீவு நாடான டோங்காவில் 15.1.2022 அன்று எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு பேரழிவு உண்டானது. 

இந்த இயற்கை பேரழிவினால், அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல பகுதிகள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. அங்கு விமான நிலைய ஓடுபாதை சாம்பலால் மூடி இருந்தது. அதை இப்போது தான் அகற்றி உள்ளனர். இந்த நிலையில் அந்த நாட்டுக்கு நிவாரணப் பொருட்களை சுமந்துகொண்டு சென்ற நியூ சிலாந்து விமானம் அங்கு போய் தரை இறங்கி உள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலிய விமானமும் உதவிப் பொருட்களுடன் போய் சேர்ந்து இருக்கிறது.

No comments:

Post a Comment