ஆசிரியரை வாழ்த்திடுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

ஆசிரியரை வாழ்த்திடுவோம்!

ஈரோட்டை

உயிரோட்டமாய்

கொண்டவர்

 

பெரியார்

பாடசாலையில்

பாலர் பருவத்து

மாணவர்

 

அய்யா பெரியாரின்

சீடர் தொண்டர்

ஊழியர் தளபதி வாரிசு என பல

படித்தரங்களை பெற்றவர்

 

ஆசிரியர் எனும்

அடைமொழிக்கு

சொந்தக்காரர்

 

இனம் மானம் பேசி

இழிவுகளை அகற்றிட

விடுதலை

நாளிதழை

போர்வாளாய்

சுழற்றுபவர்

 

நட்புநாடினால்

ஒட்டிக்கொள்வார்

இதயத்தை

பலர் உள்ளத்தை

தன்வசமாக்கிக்கொள்ளும்

நல்லவர்

 

மடைமைகளை

ஒழித்து

மாண்புகளை

காப்பதில்

மாமன்னன்இவர்

 

எதிரியை

ஏசுவதென்றாலும்

நாகரிகத்தை

கடைப்பிடித்திடுவார்

 

சட்டங்கள்

இவரது சட்டைப் பையில்

என

சொல்லும் வண்ணம்

ஆதாரங்களை

அடுக்கிடுவார்

 

கருப்புச் சட்டைக்காரர்

கடமை

கண்ணியம்

கட்டுப்பாடு

காத்திடுவார்

 

திராவிடர் கழகம்

திராவிட முன்னேற்றகழகம்

இரண்டும்

இரட்டைக்குழல்

தூப்பாக்கி என

இடிமுழக்கம்

செய்திடுவார்

 

அனுபவம்

சுறுசுறுப்பு

ஆளுமை

அரவணைப்பு

அனைத்துக்கும்

மொத்த உருவம்

ஆசிரியர் கி.வீரமணி

என்பேன்

 

அகவை 89

காணும்

ஆசிரியரை

வாழ்த்திடுவோம்

ஆரூர்ஜமால் .... 

பஹ்ரைன் (திமுக)

No comments:

Post a Comment