ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் தடுப்பூசியை உருவாக்க வேண்டும் - பைசர் நிறுவன அதிகாரி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் தடுப்பூசியை உருவாக்க வேண்டும் - பைசர் நிறுவன அதிகாரி பேட்டி

நியூயார்க், ஜன. 24- அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடு கள் பைசர் இன்க் நிறுவனம் தயாரிக்கும் பைசர் தடுப்பூசியை செலுத்துகின்றன. உலகம் முழு வதும் டெல்டா வைரஸ் மிகக் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற் போது ஒமைக்ரான் பாதிப்பு கடுமையாக உள்ளது.

ஒமைக்ரான் தொற்றிலி ருந்து பாதுகாக்கும் வகையில் இஸ்ரேல் 60 வயதுக்கு மேற்பட் டோருக்கு 4ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தி வருகிறது. இன்னும் சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளி யைக் குறைத்து வருகிறது.

இந்த நிலையில் பைசர் நிறுவனத்தின் சிஇஓ ஆல்பர்ட் போர்லா அளித்துள்ள பேட் டியில், '4, 5 மாதங்களுக்கு ஒரு முறை கரோனா பூஸ்டர் டோஸ் செலுத்துவது நல்லது இல்லை. இதற்குப் பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை செலுத் தும் வகையில் தடுப்பூசியை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது மக்களும் அதைப் பின்பற்றுவர். எளிதில் நினைவில் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வர்.

மேலும் பொது சுகாதாரப் பார்வையிலும் இதுவே சிறந்த நடைமுறையாக இருக்க முடியும். ஆகையால், ஒமைக் ரான் தொற்றுக்கு எதிராகவும் போராடக் கூடிய தடுப்பூசியை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment