பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

மும்பை, ஜன. 24- இந்திய பங்குச் சந்தை கள், இந்த வாரத்தில், தொடர்ந்து நான்கு நாட்களாக சரிவைக் கண்டதை அடுத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 10.36 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.

வாரத்தின் இறுதி வர்த்தக பங் குகள் அதிகமாக விற்பனை செய் யப் பட்டதை அடுத்து, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளுக்கு சரிந்தது.அமெரிக்காவில் பணவீக்கம் அதி கரிப்பதை அடுத்து, அதன் பிரதிப லிப்பு உலக சந்தைகளில் ஏற் பட்டது. அது இந்திய சந்தையையும் பாதித்தது. இந்த மாதத்தில் மட் டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 4,197 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு களை விற்பனை செய்துள்ள னர். மாதத்தின் துவக்கத்தில், அன் னிய முதலீட்டாளர்கள் அதிக பங் குகளை வாங்கியபோதும், அடுத்த சில நாட்களிலேயே விற்பனையில் ஈடுபட்டனர். இது, சந்தையில் குறுகிய காலத்தில், வளர்ச்சிக்கான தடையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அடுத்த 30 நாட் களுக்கு பங்குச் சந்தையில் அதிக ஏற்றங்கள் அல்லது இறக்கங்கள் இருக்கக்கூடும் என சந்தை நிபுணர் கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, சில்லரை முதலீட்டா ளர்கள் பங்குகளை வாங்குவதில் அதிக வேகம் காட்ட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ள னர். உலகளவில், ஆசிய சந்தை களான ஹாங்காங், சியோல், ஷாங் காய், டோக்கியோ ஆகிய சந்தை களும் வார இறுதி நாளில் சரிவில் முடிந்தன. அய்ரோப்பிய சந்தை களும் சரிவையே சந்தித்தன.

No comments:

Post a Comment