அதானி வில்மார் நிறுவனம்: பங்கு விலையை அறிவித்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

அதானி வில்மார் நிறுவனம்: பங்கு விலையை அறிவித்தது

புதுடில்லி, ஜன. 24- சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமானஅதானி வில்மார்புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் ஒரு பங் கின் விலை 218 முதல் 230 ரூபாயாக நிர்ணயித்து அறிவித்துள்ளது

அதானி குழுமம் மற்றும் சிங் கப்பூரைச் சேர்ந்த வில்மார் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி யாகும் இந்த அதானி வில்மார். அதானி வில்மார், சமையல் எண்ணெய் மற்றும் சில உணவு பொருட்களைபார்ச்சூன்எனும் பிராண்டு பெயரில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனம் 27ஆம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,600 கோடி ரூபாயை திரட்ட திட்ட மிட்டு உள்ளது. துணிகர முதலீட் டாளர்கள் 25ஆம் தேதியன்று முதலீடு செய்யலாம் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் 4,500 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டிருந்த நிலை யில், அதை 3,600 கோடி ரூபாயாக குறைத்துக் கொள்வதாக அண்மை யில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை குறைந்தபட்சம் 65 அல்லது அதன் மடங்குகளின் எண்ணிக்கையில் வாங்கிக் கொள் ளலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது.தற்போதைய நிலவரப்படி, இதுவரை அதானி குழுமத்தின் 6 நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment