கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நேரடியாகத்தான் நடத்தப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நேரடியாகத்தான் நடத்தப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தகவல்

 

சென்னை, ஜன.22  வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக் கும் இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடியாகத்தான் நடத் தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி, சென்னை தலைமை செயல கத்தில் நேற்று (21.1.2022) செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
முதலில் கல்லூரி மாணவர் களுக்கு நேரடியாகத் தான் தேர்வு நடக்கும் என்று அறிவித்தோம். இணையவழியில் நடக்காது என்று கூறினோம். ஆனால் இன்றைய சூழ்நிலை யில், நேரடியாகத் தேர்வு நடத் துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. மேலும் நேரடித் தேர்வு நடத்துவதற்கு காத்திருந் தால், தேர்வு நடத்த வெகுநாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதால், முதல்-அமைச்சரின் ஒப்புதலோடு, பருவ முறைத் தேர்வுகளை மட்டும் பிப்ரவரி 1ஆம்தேதி முதல் இணையவழியில் நடத்த முடி வெடுக்கப்பட்டு இருக்கிறது.
அனைத்து பல்கலைக்கழகங் களின் கீழ் வரும் பொறியியல், கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளில் குளறுபடிகள் எதுவும் இல்லாமல் ஒரே மாதிரி யாக தேர்வு நடத்துவது என்றும், அந்த தேர்வுகளை பிப்ரவரி 1ஆம்தேதி தொடங்கி, 20ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்ட மிட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து அப்போது இருக் கிற கரோனா தொற்று சூழலுக்கு ஏற்ப, கல்லூரிகளை இணைய வழியிலோ அல்லது நேரடி வகுப்புகளாகவோ தொடர்ந்து நடத்துவது பற்றி தமிழ்நாடு 
அரசின் சுகாதாரத்துறை எடுக் கும் முடிவின் அடிப்படையில், அறி விக்கப்படும்.
இறுதி ஆண்டுத் தேர்வுகள்
அதேநேரத்தில், வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கும் இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடியாகத் தான் நடத்தப்படும். 
அப்போது தொற்று இருந்தால் கூட, தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, நேரடியாக மட்டுமே தேர்வு நடக்கும். ஏனென்றால் கல்வித் தரத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும் நாம் இருக் கிறோம். இணைய வழி தேர்வு சரியான வழியில் நடத்துவதற்கு ஏது வான அனைத்து நடவடிக் கைகளையும் உயர்கல்வித்துறை எடுக்கும். அதற்கு மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
மாணவர்கள் மற்றும் பெற் றோரின் கோரிக்கை, அவர்களின் மனநிலையை அறிந்து, முதல்-அமைச்சரின் முடிவுக்கு ஏற்ப, இந்த அறிவிப்பு வெளியிடப் படுகிறது. இணைய வழி மற்றும் நேரடி வகுப்புகளில் எந்த அளவுக்கு படித்தார்களோ? அதற்கேற்றாற்போல் வினாத் தாள் அமைக்கப்படும். கிராமப் புற மாணவர்கள் இணைய வழியில் தேர்வு எழுதி, அதனை பல்கலைக்கழகங்கள், கல்லூரி களுக்கு அனுப்பி வைப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது என்ற புகார் கடந்த முறை எழுந்தது. அதனை தாமதமாக அனுப்பு வதற்கும் வாய்ப்பு வழங்கியிருக்கிறோம்.
  இவ்வாறு அவர் கூறினார்.
இணையவழியில் தேர்வு எழுதும் 20 லட்சம் மாணவர்கள்
கரோனா தொற்று பரவல் சூழலை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த நேரடியாகத் பருவ முறைத் தேர்வு முறையை மாற்றி, கடந்த செமஸ்டரில் நடத்தப் பட்டது போன்று இணைய வழியில் செமஸ்டர் தேர்வை நடத்த உயர்கல்வித்துறை உத்தர விட்டு இருக்கிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள கலைக் கல்லூரிகளில் படிக்கும் 12 லட்சத்து 94 ஆயிரத்து 051 மாணவ-, மாணவிகளும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் 52 ஆயிரத்து 301 பேரும், அனைத்து வகை பொறியியல் கல்லூரி களில் படிக்கும் 4 லட்சத்து 57 ஆயிரத்து 196 மாணவ-மாணவி களும்,  தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 331 மாணவ-, மாணவி களும் என மொத்தம் 20 லட்சத்து 879 மாணவ-, மாணவிகள் இணைய வழியில் இந்த பருவ முறைத் தேர்வை எழுத இருக் கின்றனர். இதுதவிர அரியர் மாணவர் களும் இந்த தேர்வை எழுதுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment