புதுச்சேரியில் ஒரே நாளில் 1,897 பேருக்கு தொற்று உறுதி 5 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

புதுச்சேரியில் ஒரே நாளில் 1,897 பேருக்கு தொற்று உறுதி 5 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி,ஜன.24- "புதுச்சேரி மாநிலத்தில் நேற்று (23.1.2022) 4,801 பேருக்கு பரிசோதனை செய் யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,395 பேர், காரைக்காலில் 342 பேர், ஏனாம் 116 பேர், மாஹேவில் 44 பேர் என மொத்தம் 1,897 (39.51 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறி யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத் தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 52 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவ மனைகளிலும் 174 பேரும், வீடு களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலை யில் 15,522 பேரும் என மொத்தமாக 15,696 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் புதுச்சேரி சண்முகா புரத்தைச் சேர்ந்த 55 வயது பெண், ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்த 89 வயது முதியவர், வில்லியனூர் புதுநகரைச் சேர்ந்த 80 வயது முதியவர், வைத்திக்குப்பம் பகு தியைச் சேர்ந்த 65 வயது முதியவர், புதுச்சேரி மோந்த்ரேஸ் வீதியைச் சேர்ந்த 90 வயது முதியவர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,906ஆக அதிகரித்துள்ளன. இறப்பு விகிதம் 1.28 சதவீதமாக உள்ளது. புதிதாக 1,264 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 611 (88.44 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 15 லட்சத்து 21 ஆயிரத்து 213 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது."

இவ்வாறு புதுச்சேரி மாநில சுகா தாரத்துறை செயலர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

நடமாடும் வாகனம் மூலம் கரோனா பரிசோதனை

சென்னை, ஜன.24    சென்னை அய்.அய்.டி., கிராமப்புற மக்களுக்கு கரோனா பரிசோதனை எடுத்து முடிவுகளை தெரிவிக்கும் வகை யில்,ரூ.50 லட்சம் செலவில் நட மாடும் வாகன வசதியை உருவாக்கி இருக்கிறது.  தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர் களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மூலம்தான் கரோனா உறுதி செய் யப்பட்டு வருகிறது. மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் பரி சோதனை வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தநிலையில் சென்னை அய்.அய்.டி., கிரா மப்புற மக்களுக்கு கரோனா பரிசோதனை எடுத்து முடிவுகளை தெரிவிக்கும் வகையில், ரூ.50 லட்சம் செலவில் நடமாடும் வாகன வசதியை உரு வாக்கி இருக்கிறது. ஏற்கெனவே நடமாடும் வாகனங்கள் மூலம் கரோனா பரிசோதனை மேற் கொள்வது நடைமுறையில் இருக் கிறது. ஆனால் இந்த வாகனத்தில், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கே சென்று கரோனா பரிசோதனைகளை எடுப்பதோடு, வாகனத்தில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் முடிவுகளையும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த வாகனத்தில் குளிர்சாதன வசதி, அதிநவீன ஆய்வகம், தொழில்நுட்ப வசதி களும் இருக்கின்றன. கிரா மப்புறங் களில் இருந்து நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள், சுகா தார மய்யங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும், தரவு களை விரைவாக பகிர்ந்து கொள் வதற்கும் இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த வாக னத்தை கரோனா தொற்றுக்கு மட்டுமல்லாது, டெங்கு, காச நோய் உள்பட இதர வைரஸ் தொற்றுகளை பரிசோதனை செய்வதற்கும் பயன் படுத்த முடியும் என்று சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் தெரிவித் துள்ளது. இதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன்  பார்வை யிட்டார். இந்த வாகனம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மாணவ மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை

ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடில்லி, ஜன.24 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வை எழுதவேண்டும் இந்த தேர்வு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இந்த தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவி களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment