வருங்கால வைப்புநிதியில் கூடுதலாக 14 லட்சம் பேர் சேர்ந்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 21, 2022

வருங்கால வைப்புநிதியில் கூடுதலாக 14 லட்சம் பேர் சேர்ந்தனர்

புதுடில்லி, ஜன.21 தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த நவம்பர் மாதத்தில் 13 லட்சத்து 95 ஆயிரம் சந்தாதாரர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த நவம்பர் மாதத்தில் 13 லட்சத்து 95 ஆயிரம் சந்தாதாரர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இது, முந்தைய அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2 லட்சத்து 85 ஆயிரம் அதிகம். 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 3 லட்சத்து 84 ஆயிரம் அதிகம்.

சந்தாதாரர்கள் அதிகரித்ததன் மூலம், பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகி இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இவர்களில் 5 லட்சத்து 67 ஆயிரம் பேர், வேலை இழந்து, வேறு வேலையில் சேர்ந்து மீண்டும் வைப்புநிதி அமைப்பில் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் சேர்ந்தவர்களில் 60 சதவீதம்பேர், தமிழ்நாடு, கருநாடகா, மராட்டியம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment