தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுநாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 11, 2021

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுநாள்!

 பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், உலக அமைப்பாளர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

எதிர்வரும் தைத்திங்கள் தமிழ் புத்தாண்டுக்குத் தமிழ்நாடு மக்களுக்கெல்லாம் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள் கூறித் தமிழ்நாட்டை மீட் டெடுத்த மாண்புமிகு முதலமைச்சர் மு.. இஸ்டாலின் அவர்கள் பல்வகைப் பொருள் களைப் பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கிட அறிவித்து அவை திறம்பட நடைபெற்று வருகிறது. தமிழ்ப்புத்தாண்டு சித்திரை திருநாள் அல்ல. தை முதல் நாள் தான் என்பதை சங்க காலம் தொட்டு ஆய்வாளர்கள் தமிழறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் என எடுத்துக்கூறித் தமிழ்ப் புத்தாண்டு நாள் தை முதல் நாளே என நிறுவி உள்ளார்கள். தாங்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்தவர்கள் அனைவரும் பல்லாண்டுகளாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

உலக இனங்களில் கிறித்தவர் இயேசு நாதர் பிறப்பையும், இசுலாமியர் நபிகள் நாயகம் பிறப்பையும், பவுத்தர்கள் புத்தரின் பிறப்பையும் முன் வைத்து தொடராண்டு முறையைப் பின்பற்றி கொண்டாடி வரு கின்றனர். அவ்வாறே கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் மரபாண்டை வந்தேறிகள் மறைத்துத் தங்களின் பிரபவ முதல் ஈறாக உள்ள அறுபது ஆண்டு பெயர்களை நம்ப வைத்துப் பின்பற்ற வைத்து தொல்காப்பியம் காலம் முன்பிருந்தே வழக்கில் வந்த தைத் திங்கள் தமிழ்ப்புத்தாண்டை மறைத்து விட்டார்கள்.

இக்குறையை நீக்கவும் தமிழர்களின் தொடராண்டை மீட்டெடுக்கவும் நூறு ஆண்டுகளுக்கு முன் அக்கால மூத்த தமிழறிஞரும் பேராசிரியருமான கா. நம சிவாயம் அவர்கள் தலைமையில் 500க்கு மேற்பட்ட அறிஞர்கள் கூடினார்கள். எப்படி இயேசு, நபிகள் நாயகம், புத்தர் அருளாளர்களின் வழி அவர்களுக்குரிய தொடராண்டு உருவாக்கப்பட்டதோ அதே போல் தமிழன்னை தவ மகனான் திரு வள்ளுவர் தம் பிறந்த ஆண்டை வைத்துத் தமிழ் தொடராண்டாகத் தமிழ்க்கடல் மறை மலை அடிகளார் தலைமையில் அறிஞர் திரு.வி.. அவர்கள், முத்தமிழ் காவலர் கி..பெ. விசுவநாதம் போன்றோர் இணைந்து அனைத்து இலக்கிய ஆய்வு களையும் அறிந்து திருவள்ளுவர் பிறந்த நாள் கி.மு. 31 என்று முடிவு செய்தனர். 1921-ஆம் ஆண்டின் படி 18.1.1935-ஆம் ஆண் டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திருவள்ளுவர் திருநாள் திருவள்ளுவர் கழகம் கொண்டாடிய போதே திருவள்ளு வர் பிறப்பு நாளே தமிழர் தம் தொடராண் டாகத் தமிழர்கள் பின்பற்றிட வேண்டினர். ஆனால் தொடர்ந்து நடைமுறைக்குத் தமிழர்கள் கொணரவில்லை.

தமிழ், தமிழர் மீட்பு அரசு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவழி கலை ஞர் அரசு அமைந்த போது கலைஞர் அரசு 3.11.1969 - இல் அரசாணை எண். 272-இல் திருவள்ளுவர் ஆண்டு (சுறவம் ) தை பிறப்பே தமிழர் தொடராண்டாகும் என அறிவிப்புச் செய்தது. அரசாணை வெளி யிட்டது. தமிழ்நாடு அரசின் பொது விடு முறை நாளாகவும் இதை (சுறவம்) இரண் டாம் நாளை அறிவித்தது. பின்னர் கலைஞர் ஆட்சி முழுதும் இந்த நடைமுறையே தொடர்ந்தது, மீண்டும் 2008-இல் தை முதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு என்று தமிழ் நாடு அரசு சட்டத்தின் வழி உறுதி செய்தது. தமிழ்நாடு மட்டுமல்ல, உலக முழுதும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டாக   தை முதல் நாளையே கலைஞர் செயல் திட்ட வழி ஏற்றுக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

கலைஞர் காலத் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் பிறந்த நாள் அடிப்படையில் நடைமுறைப்படுத்திய தமிழாண்டை பின் வந்த ...தி.மு.. அரசு தமிழர்களுக்குப் பெருந்துரோகம் விழைக்கும் வகையில் தொடராண்டில்லாத 60 ஆண்டில் முடியும். சித்திரை ஒன்றாம் நாளை, தங்கள் காழ்ப் புணர்ச்சியால், மாற்றம் செய்து அறிவித்தது.

இந்த முறை கேட்டுக்கு உதவியாகவும், தமிழ், தமிழர்கள் மேம்பாடுகளுக்குத் தடை யாகவும் செயல்பட்ட செயலலிதா அரசின் அன்றைய அமைச்சர் பன்னீர் செல்வம்தமிழ்ப்புத்தாண்டுசித்திரை என்று கூறுவதற்கு எந்தவித மரபு உரிமையும், அடிப்படைக் கரணியங்களும் இல்லை . எனவே, தமிழையும், தமிழர்களையும் மீட் டெடுத்து வந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் தம் வழித்தடத்தில் தை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாக்கத் தேவைப்பட்டால் அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டும். கலைஞர் உரு வாக்கித்தந்த தமிழ்த் தொடர் ஆண்டு தை முதல் நாள் என்பதை உறுதி செய்ய வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment