நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆட்சியர்களுடன் ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆட்சியர்களுடன் ஆலோசனை

சென்னை, டிச.30 நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் குறித்து ஆட்சியர் களுடனான ஆலோசனை மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் காணொலி காட்சி மூலம் நேற்று  (29.12.2021) ஆலோசனை நடத் தினார்.

தேர்தல் முன்னேற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு எந்திரத்தில் பயன் படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்களின் இருப்பு போன்றவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர் தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதி தாக வார்டு மறுவரையறை செய் யப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு புகைப்பட வாக்காளர் பட்டியல் தயார்செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முதல்நிலை சரிபார்ப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளவும் அறி வுறுத்தப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் படும் அனைத்து அலுவலர்களும் கரோனா தடுப்பூசி செலுத்தி இருப் பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment