பேரிடர் நிவாரணம்; குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

பேரிடர் நிவாரணம்; குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை! ஒன்றிய அரசின் பாரபட்சம்!

புதுடில்லி, டிச.31 -புயல், வெள்ளம், நிலச்சரிவுஉள்ளிட்ட இயற்கை பேரிடர்களால்பாதிக்கப் பட்ட குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங் களுக்கு கூடுதல் நிவாரணநிதியை ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு,அதே வகை பாதிப்பிற்குள்ளான தமிழ் நாட்டிற்கு மட்டும் நிவாரண நிதிஎதையும் ஒதுக்காமல் தமது பாரபட்சத்தை காட்டியுள்ளது.

இயற்கை பேரிடர்களால் வெகுவாக பாதிக்கப்பட்ட குஜ ராத், அசாம்,கருநாடகா, மத்தியப் பிர தேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத் திற்குஒன்றிய அரசு ரூபாய் 3063 கோடியே21 லட் சத்தை கூடுதல் நிதியாக ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதாக ஒன்றிய அரசின் செய்திக்குறிப்பு தெரி விக்கிறது.

ஒன்றிய உள்துறை அமைச் சர்அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு இந்த ஒதுக் கீட்டை செய்துள்ளது. குஜராத் திற்கு ரூ.1138.35 கோடி.மேற்கு வங்கத்திற்கு ரூ.586.59 கோடி, அசாமிற்கு ரூ.51.53 கோடி, கருநாடகா விற்கு ரூ.504.06 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி, உத்தரகாண்டிற்கு ரூ.187.18 கோடி எனமாநிலங்களுக்கான பேரிடர் பொறுப்புநிதிய த்திலிருந்து ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

ஏற்கெனவே குஜராத்திற்கு ரூ.1000 கோடியும், மேற்கு வங்கத் திற்கு ரூ.300கோடியும் ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுதலாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாநில அர சுகள் இயற்கை பேரிடர்கள் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைப்பதற்கு முன்ன தாக, அதிகாரிகள் அடங்கிய மத்தி யக் குழுவை அம்மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு ஒன்றிய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையில் இதே மாதிரி கடுமையாக கடும் மழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்தியக் குழு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றும், இன்று வரைநிதி ஒதுக் கீடு எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு வெள்ள பாதிப்பிற்கு உட னடியாகரூ.6,229 கோடி நிதி ஒதுக்குமாறுகடிதம் எழுதியுள்ளார்.

அது மட்டுமின்றி தமிழ்நாடு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச் சர்களை சந்தித்து இது குறித்து முறையிட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment