மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா; மக்களவையில் நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா; மக்களவையில் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

புதுடில்லி, நவ.29- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று (29.11.2021) காலை 11 மணிக்கு தொடங்கி 23.12.2021வரை நடைபெறுகிறது.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஓராண்டாக நாடு தழுவிய அளவில் விவசாயிகள் தொடர்போராட்டத்தை நடத்தி வந்தனர். விவசாயி களுடன் ஒன்றிய பாஜக அரசு நடத்திய 11 சுற்று பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 3 சட்டங்களையும் திரும்பப் பெறாமல் ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்தது. அதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது. விவசாயிகளின் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கடந்த 19.11.2021 அன்று பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ஆனாலும், நாடாளுமன்றத்தில் முழு மையாக 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3  வேளாண் சட்டங் களையும் திரும்பப் பெறும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதர வுடன்  மக்களவையில் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் நடவடிக்கையின் முதல்படி தொடங்கியுள்ளது. இந்த மசோதா பின்னர் மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப் பப்படும். அவர் ஒப்புதல் அளித்து அரசாணை வெளி யிட்ட பிறகே 3 வேளாண் சட்டங்களும் அதிகாரப் பூர்வமாக ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தொடங்கிய உடன் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

மேலும், அவர்கள் தொடர் முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவைத் தலைவர் அவையை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment