கேரளாவில் நோவோ வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 14, 2021

கேரளாவில் நோவோ வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ.14 கேரளாவில் நோவோ வைரஸ் பரவி வருவ தால் தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு  உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை ரிப்பன் மாளிகையில் இருந்து  நேற்று (13.11.2021) நடமாடும் மருத்துவ வாகனங் களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தயாநிதிமாறன் எம்.பி., தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத் துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செய லாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப் பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதா வது:-

குளோரின் மாத்திரைகள்

மாநிலத்தில் கடந்த 4 நாட் களில் 38 ஆயிரத்து 704 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 3 லட்சத்து 54 ஆயிரத்து 547 பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த முகாம்களில் இதுவரை 43,578 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், இந்த முகாம்களிலேயே கரோனா தடுப்பூசியும் செலுத் தப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற அதிகபட்சமான மருத்துவ முகாம்கள் தற்போது தான் நடத்தப்படு கிறது.

இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் ஆகியவற் றுக்கு சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன. குடிசைப்பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரை கிலோ வீதம் பிளீச்சிங் பவுடர் வழங்கப்பட உள்ளது. சென்னையில் சுமார் 4 லட்சத்து 16 ஆயிரம் குளோரின் மாத்தி ரைகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் ரூ.167 கோடி அளவிலான மருந்து, மாத்தி ரைகள் கையிருப்பில் உள்ளன.

இதுவரை சுமார் 75 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ளனர். தமிழ்நாட்டில்71 லட்சம் தடுப் பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தமிழ்நாட்டில் 72 சதவீத மக்கள் முதல் தவணை தடுப் பூசியும், 33 சதவீத மக்கள் இரண் டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவுரையின்படி, நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 7 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள் ளன.

எல்லைகளில் கண்காணிப்பு

டெங்கு காய்ச்சலை கட்டுப் படுத்த பொதுசுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட் டுள் ளன. தற்போது வரை 493 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,052 நபர் களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் புதிதாக பரவி யுள்ள நோவோ வைரஸ் தமிழ் நாட்டில் பரவாமல் தடுக்க எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான மருந்து களும் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை மணலி மண்டலத் துக்குட்பட்ட சின்னமாத்தூரில் நடந்த மருத்துவ முகாமை அய்..எஸ். அதிகாரி பி.கணே சன் ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment